பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

4. கற்றலும் கேட்டலும்

கலியான சுந்தரஞரின் பள்ளிப் படிப்பு வெம்பி வீழ்ந்தது. ஆனல் கல்வி முகிழ்த்தது.

அக்காளில் சென்னையின் பல பகுதிகளிலும் தமிழ்த் தொண்டு நடைபெற்று வந்தது. அத்தொண்டு கிகழ்த்தி யவர் யாழ்ப்பாணம் கதிரை வேற்பிள்ளை யாவார். சிறப் பாக இரண்டு இடங்களில் அவர் புராணம் சொல்லி வந்தார். ஒன்று, கந்தசாமி கோவில் வசந்த மண்டபம். மற்றாென்று, சிந்தாதிரிப் பேட்டை அங்காள பரமேசுவரி கோவில்.

கந்தசாமி கோவிலிலே ஞாயிறு தோறும் தணிகைப் புராணம். அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலில் செவ்வாய் தோறும் கந்தபுராணம். வெள்ளிதோறும் திருவிளையாடற் புராணம்.

கலியான சுந்தரனர் இவ்விரண்டு இடங்கட்கும் தவருது சென்றார்; கதிரை வேலரின் சொன் மாரியைச் செவி மடுத்தார்.

கதிரை வேலரின் சொன்மாரி எவ்வாறு இருந்தது? வெறும் புராணப் பிரசங்கமாக இருந்ததா? இல்லை.