பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43

அவரது சொன்மாரியிலே இலக்கியம் இலக்கணம் தர்க்கம், சாத்திரம் முதலிய யாவும் ஆலங்கட்டி போல் உதிரும். அது கேட்டு மாணவர் பெரிதும் இன்புறுவர்.

கதிரை வேலரிடம் யாப்பிலக்கணமும் கற்றார் கலியான சுந்தரனர். இந்நிலையில் கதிரை வேலர் நோய் வாய்ப்பட்டு நீலகிரியிலே இறந்தார்.

யாழ்ப்பாணம் ஆறுமுக காவலரிடத்திலே தமிழ் பயின்ற ஒருவர், மயிலாப்பூரிலே வசித்து வந்தார். அவர் பெயர், மகாவித்வான் தணிகாசல முதலியார் என்பது.

அவர்பால் சென்றார் கலியாண சுந்தரனுர். சிவஞான போதம், சிவஞான சித்தியார் முதலிய சைவ சாத்திரங் களைக் கற்றார்.

இராயப் பேட்டையில் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சிதம்பர முதலியார். அவர் திருக்குறள் வல்லவர். அவரிடம் சென்றார் கலியாணசுந்தரர்ை.

தங்களிடம் திருக்குறள் கற்க விரும்புகிறேன். எனக்குக் கற்பியுங்கள்’ என்று வேண்டினர். சிதம்பர முதலியார் இணங்கினரா? இல்லை.

எயான் போதிக்க வல்லவன் அல்லன். நீர் என் ணுடன் இரும். இருவரும் சேர்ந்து திருக்குறள் படிப் போம்’ என்றார் அவர்.

கசரி’ என்றார் கலியாணசுந்தரனர்.

திருக்குறள் நுட்பங்களை எல்லாம் கூறினர் சிதம்பர முதலியார். அவர் திரட்டி வைத்திருந்த குறிப்புகள் பல, பேராசிரியர் போலத் துணை புரிந்தன