பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45

விளக்கிக் கூறுவார். அவ்விளக்கம் கேட்டுக் கலியான சுந்தரனர் பயன் பெறுவார்.

மருவூர் கணேச சாஸ்திரியார் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நூல்களைச் சொல்லி வந்தார். அங்கு, கலியாணசுந்தரனுரைக் காணலாம். வான்மீகி இராமாயணப் பிரசங்கம் எங்கு கடைபெற்ற போதிலும் அங்குச் செல்வார் கலியாணசுந்தரனர். வியாச பாரதம் கூறும் இடங்களுக்கெலலாம் செல்வார். பகவத் கீதை படிக்குமிடம்தோறும் சென்று செவி மடுப்பார்.

கடலங்குடி கடேச சாஸ்திரியார் சம்ஸ்கிருத நூல் களைத் தமிழில் தந்தவர். அவர்தம் மொழிபெயர்ப்பு நூல்களில் தோய்ந்தார் கலியாணசுந்தரர்ை. சாஸ்திரி யார் சங்கரரின் விரிவுரைகளைத் தமிழில் தந்தவர். அச் சங்கரமாபாடியம் கலியாணசுந்தரனுர்க்குப் பெருங் துணை புரிந்தது.

புதுப்பேட்டைத் தோட்டத் தெருவிலே ஜைனர் சிலர் வசித்தனர். அவருள் குறிக்கத் தக்கவர் இருவர். ஒருவர் பார்சுகாத கயினர். இன்னொருவர் பேராசிரியர் சக்கரவர்த்தி கயினர். இவர்கள்பால் சென்று ஜைன மத சித்தாந்தங்களை அறிந்தார் கலியாணசுந்தரனர்.

இராயப்பேட்டையிலே சாக்கிய பெளத்த சங்கம்

ஒன்று இருந்தது. அச்சங்கத்தினை நடாத்தியவர் அயோத்திதாஸ் பண்டிதர் என்பவர்.

புத்த பிகூடி ஒருவர் அச்சங்கத்துக்கு வந்தார். அவர் இலங்கையைச் சேர்ந்தவர்; தமிழர்; திரிபிடகமும் வேறு நூல்களும் போதித்தார். அவர் தம் போதனை கேட்டார் கலிபானசுந்தரஞர்.