பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46

இஸ்லாமானவர் ஒருவர். பெயர்அப்துல்கரீம். அவர் ஒரு மெளல்வியின் புதல்வர்; திருக்குரான் ஒதியவர். திருக்குரானே வாசித்துத் தமிழில் பொருள் கூறுவார். கலியாணசுந்தரனுர் அவரிடம் கேட்டறிந்தார்.

அந்நாளில் மதராஸ் டைம்ஸ் என்றேர் ஆங்கில தினப்பதிப்பு மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. அப்பத்திரிகையின் ஆசிரியர், கிளின்பார்லோ என்பவர். அவர் ஆங்கில இலக்கியப் பேரறிஞர். தம் பத்திரிகை .யிலே ஷேக்ஸ்பியர் கிள்ப் என்றதொரு பகுதி கண்டார் அவர். அந்தப் பகுதியிலே அறிஞர் பலர், ஷேக்ஸ்பியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ் முதலிய வான்முகில்கள் பொழிந்த பாக் கடலைக் கடைவர். அமுதம் எழும். அவ்வமுதத்தைப் பருகி இன்புறுவார் கலியாணசுந்தரர்ை. -

சிங்காரவேல் செட்டியார் டார்வின்கண்ட உண்மை களை அறிவுறுத்தி வந்தார். அவர் தம் சொற்பொழிவு கேட்டுப் பயன் பெற்றார் கலியாணசுந்தரனர்.

இரவு நேரத்திலே சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள் குகானந்த நிலையத்துக்கு வருவார். அவருடன் கலந்து தத்துவ விசாரணை செய்வார்; மேற்கு காட்டுத் தத்துவ நுட்பங்களைக் கேட்டு அறிவார். யார்? கலியாண சுந்தரர்ை.

இங்கிலையில் கலியாணசுந்தரர்ைக்கு ஒர் ஐயம் தோன்றியது. என்ன? இலக்கணம் பற்றியது அந்த ஐயம். இல்பொருள் உவமை, உள்ளுறை உவமை என இரண்டு. இல்பொருள் உவமையாவது யாது? உள் ஞறை உவமை யாது?

ஐயம்போக்குவார் யார்? சென்னையில் வாழ்ந்தபுலவர் பலரிடம் கேட்டுப் பார்த்தார். எவரும் விளக்குவாரிலர்.