பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

51

காங்கிரஸ் பித்து அவரைப் பற்றியது. 1907ம் ஆண்டு. காங்கிரசிலே, மிதவாதிகள் தீவிரவாதிகள் போராட்டம். தீவிரவாதிகள் திலகர் தலைமையில் எழுந்தார்கள். வங்காளத்திலே அரவிந்தர் தமது வந்தே மாதரம் பத்திரிகை மூலம் முழங்கினர். தமிழ் காட்டிலே மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இந்தியா’ பத்திரிகை மூலம் கர்ஜனை செய்தார்.

அந்த நாளிலே தீவிர வாதத் திலகங்களாக விளங்கி யவர் மூவர். லால் பால், பால் என அம்மூவரும் அன்புடன் அழைக்கப்பட்டனர்.

லால் என்பது லாலா லஜபதிராயின் சுருக்கம். பால் என்பது பாலகங்காதர திலகரின் சுருக்கம். மற்றாெரு பால் விபின சந்திர பாலரைக் குறிக்கும். இவரே அக் நாளின் தேசீயத் திரிமூர்த்திகள்.

திரிமூர்த்திகளில் ஒருவரான. பி.ஸி. பால் (விபின சந்திர பாலர்) சென்னை வந்தார். இடி முழக்கம். அம் முழக்கம் கேட்ட சென்னை மக்கள் மகுடி கேட்ட காக மாயினர். கலியான சுந்தரருைம் அம் முழக்கம் கேட் டார்; மகுடி கேட்ட காகம் ஆனர்.

வந்தே மாதரம் பத்திரிகைதான் தீவிர வாதிகளின் முரசாக முழங்கியது. அரவிந்தரின் கட்டுரைகள் அனல் கக்கின. அப்பத்திரிகையை வரவழைத்தார் கலியான சுந்தரனுர்; படித்தார்; தாம் படித்த அளவில் கின்றாரா? இல்லை.

காலையில் ஏழரை மணிக்கே கம்பெனிக்குப் போய் விடுவார். அதாவது ஆபீஸ் திறப்பதற்கு அரைமணி கேரம் முன்னதாகவே சென்று விடுவார். கம்பெனி ஊழியர்களைக் கூட்டுவார்.