பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

52

வந்தே மாதரம்” பத்திரிகையைப் படித்துக் காட்டுவார். பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைகளைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லுவார். எல்லாரும் ஆர்வத்துடன் கேட்பர். ஒவ்வொரு நாளும் இப்படி நிகழ்ந்து வந்தது.

அந்தக் காலம் எப்படிப்பட்டது? வந்தே மாதரம்’ என்ற சொல் காதில் விழுந்தாலே வெள்ளேயர் மருண்டு சீறிய காலம். ஸ்பென்சர் கம்பெனியோ வெள்ளையர் கம்பெனி. அக்கம்பெனி ஊழியரான கலியாண சுந்தர ர்ை வந்தே மாதரம் பத்திரிகையைப் படித்து எல்லாருக் கும் விளக்கிச் சொல்லி வந்தால் அதை வெள்ளையர் எவ்வாறு பொறுப்பர்? பொறுக்கமாட்டார் அன்றாே? வெள்ளையர் எல்லாரும் சேர்ந்து, கம்பெனி மானேஜிங் டைரக்டரின் காதில் போட்டனர். மானேஜிங் டைரக்டர் கலியான சுந்தரனுரை அழைத்தார்; கடுமையாக எச்ச ரிக்கை செய்தார். கலியாண சுந்தரர்ை அது பொறுப் பாரோ? பொறுக்கமாட்டார் அன்றாே?

கலியான சுந்தரனரின் தமையனுர் ஊழியம் செய்து வந்த வைஜயந்தி அச்சகம் அருகில்தான் இருந்தது. அதாவது ஸ்பென்சர் கம்பெனி அருகில்தான் இருந்தது. இடை வேளையின் போது வைஜயந்தி அச்சகம் சென்றார் கலியான சுந்தரர்ை. தமையனுரைக் கண்டார். ஸ்பென்சர் கம்பெனி மானேஜிங் டைரக்டர் தம்மை எச்சரித்ததைக் கூறினர். இனி, அக்: கம்பெனியில் ஊழியம் செய்யத் தமக்கு விருப்பமில்லை என்றார், வேலையை ராஜிநாமா செய்யப் போவதாகச் சொன்னர்.

தமையனர் என்ன சொன்னர்? உனது விருப்பம் எப்படியோ அப்படியே செய்’ என்றார், ஸ்பென்ஸர் கம்பெனி வேலையை ராஜிநாமா செய்தார் கலியான