பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

53

சுந்தரனர். ஸ்பென்ஸர் கம்பெனி வாழ்வு 1908ம் ஆண்டுடன் முற்றுப் பெற்றது.

அன்றிரவு, பால சுப்பிரமணிய பக்த ஜன சபையில் மூவர் கூடினர். மூவர் எவர்? ஒருவர் கலியான சுந்தர ர்ை. மற்றாெருவர் கலியான சுந்தரனரின் தமையனர். மூன்றாமவர் யார்? இவ்விருவரின் கண்பரான சிவசங்கர முதலியார்.

இனி என் செய்வது? இதுவே சிந்தனை. ஆழ்ந்த சிந்தனை. சிந்தனையின் விளைவு என்ன? அச்சுக்கூடம் ஒன்று அமைத்து, நூல்களை வெளியிடுவது என்பதே விளைவு.

அவ்வாறே அச்சுக்கூடம் ஒன்று தொடங்கப் பட்டது. உமாபதி குருப்பிரகாசம் பிரஸ்’ என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது. கலியாண சுந்தரனர் எழுதிய விசேடக் குறிப்புரையுடன் பெரிய புராணம் சஞ்சிகை சஞ்சிகையாக வெளியிடப்பட்டது. திரு மந்திரம் பதிக்கப் பெற்றது. வெளி வேலைகளும் செய்யப்

t_Pi—i-65s.

இரண்டு ஆண்டுகள் ஓடின. கண்ட பலன் என்ன? கஷ்டம் பெரு கஷ்டம் அச்சுக்கூடம் விற்கப்பட்டது. கடன் அடைந்த பாடில்லை. பற்றாக்குறைக்கு அன்னை யார் ககைகளையும் விற்றுக் கடன் தீர்த்தனர். குடும்பம் புயலிடைச் சிக்கிய கலம் ஆயிற்று. கலியாண சுந்தர ர்ை கலங்கினர். கடற்கரையே புகலிடமாகக் கொண் டார். பெரும் பொழுதை அங்கேயே கழித்தார். பார்த்த சாரதிப் பெருமானை நினைந்து கினைந்து உருகினர்.

1910ம் ஆண்டின் தொடக்கத்திலே ஒருநாள் டானி யல் சிங் என்பார் கலியாணசுந்தரனுரைக் கண்டார். அவர் கலியாண சுந்தரனரின் பழைய நண்பர்.