பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54

ஆயிரம் விளக்கு வெஸ்லியன் மிஷன் பள்ளியில் ஆசிரியர் தேவை; நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது?’ என்று கேட்டார் சிங்.

மீைண்டுமா வேலைத் தொல்லை?” என்றார் கலியான சுந்தரர்ை.

ஆைசிரியத் தொழில் புண்ணியம்’ என்றார் சிங்.

இருவரும் சென்றனர். தலைமை ஆசிரியரைக் கண்டனர். தலைமை ஆசிரியரின் பெயர் ஜான் ரத்தினம் பிள்ளை என்பது. இருவர் தம் சர்ட்டிபிகேட்டுகளையும் பார்த்தார் ஜான் ரத்தினம்பிள்ளை. இருவரையும் ஆசிரிய ராக எடுத்துக் கொண்டார்.

ஆயிரம் விளக்கு என்பது, சென்னை நகரின் ஒரு பகுதி. இப்பகுதியில் ஆதி திராவிட மக்களே பெரும் பான்மையினராக வசித்து வந்தார்கள். இவர்களுக் கென்று வெஸ்லியன் மிஷனுல் தொடங்கப்பட்ட பள் ளியே ஆயிரம் விளக்கு வெஸ்லியன மிஷன் பள்ளி. இது, ஆதிதிராவிடர்க்கே ஏற்பட்டதாயினும் மற்ற வகுப்பினரும் கல்வி பயிலத் தடை இல்லை. இப் பள்ளியில் பாலர் வகுப்பு முதல், மூன்றாம் பாரம் வரை வகுப்புகள் இருந்தன. அக்காளில் ஆதி திராவிடர்க் கென்று அமைந்த பள்ளிகளில் சிறந்து விளங்கியது இப்பள்ளியே. அரசாங்க உதவியும் இதற்கு அதிகம். ஆயிரம் விளக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் இரத்தினம் அவர்கள்.

1910 ஆண்டுத் தொடக்கத்திலே இப்பள்ளி ஆசிரி யராக அமர்ந்தார் கலியான சுந்தரனுர், ஆறுஆண்டுகள் அப்பள்ளியில் பணி புரிந்தார்.