பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59

மனைவியுடன் மயிலாப்பூர் செல்வார் திரு. வி. க; காபலீச்சுரரைத் தரிசித்து வணங்குவார். பின்னே இருவரும் குளக்கரையில் அமர்ந்து இன்பமாகப் பேசு வர். ஒவ்வொரு நாள், திருவல்லிக்கேணி செல்வர்; பார்த்தசாரதியை தரிசித்து வணங்குவர்; குளக்கரை யில் அமர்ந்து இன்பமாகப் பேசுவர்.

குளக்கரைப் பேச்சைப் பெரிதும் விரும்பினர் கமலாம்பிகை. வாரந்தோறும், சனி ஞாயிறுகளில் திருவொற்றியூர் செல்ல எண்ணினர். திருவொற்றியூர் செல்வது எப்படி? அன்னையாரிடம் அனுமதி பெறுவது எப்படி? தமது கருத்தைத் திரு. வி. கவிடம் தெரி வித்தார்.

வண்ணுரப் பேட்டையிலே, கமலாம்பிகையின் பெரிய தந்தையார் இருந்தார். அவர் மிக வயது சென் றவர். அவரையும் பார்த்துவிட்டுத் திருவொற்றியூருக் கும் சென்று வரலாம் என்று கருதினர் திரு. வி. க.

கமலத்தின் பெரியப்பா கமலத்தைப் பார்க்க விரும்புகிறார். பாவம் வயதானவர். வண்ணுரப் பேட்டையிலிருந்து வந்து போக வருந்துகிறார்’ என்று தம் தாயிடம் கூறினர் திரு. வி. க.

கபிள்ளையில்லாத ஒருவரைத் தள்ளாத காலத்தில் போய்ப் பார்த்து வந்தாலென்ன? போகலாம்’ என்று கூறி, விடை தந்தார் அன்னையார்.

“உங்கள் சாமர்த்தியமே சாமர்த்தியம்’ என்று: நகைத்தார் கமலாம்பிகை.*

திேரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்.