பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

7. வெஸ்லி கல்லூரியும் தலைமைத் தமிழாசிரியர் பதவியும்

இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார் ஒருவர். அவர் பெயர் சே. கிருஷ்ணமாச்சாரியார் என்பது. நீண்ட கால மாகவே, அவர் அக்கல்லூரியின் தலைமைப் பேராசிரிய ராக இருந்தார். நீண்டகாலத் தொண்டுக்குப்பின் அவர் பதவியினின்றும் விலகி, ஒய்வு பெறப் போகிறார் என்ற வதந்தி உலவியது. பின்னே அஃது உறுதியாயிற்று. அப்பதவிக்குப் பலர் விண்ணப்பித்தனர். அப் பதவிக்கு முயற்சி செய்யுமாறு ஜான் ரத்தினம்

திரு.வி.க. வைத் துண்டினர்.

அவர்தம் தூண்டுதலுக்கு ஒருப்பட்டார் திரு.வி.க. விண்ணப்பம் விடுத்தார். வெஸ்லி கல்லூரியின் பழைய மாளுக்கராதலாலும், வெஸ்லியன் மிஷன் சார்புடைய பள்ளியொன்றில் வேலை பார்த்து வருவோராதலாலும், தமிழ்ப் பேராசிரியர் பதவிக்குத் திரு. வி. க. வையே கியமிப்பது என்று உறுதி செய்தார் பிரின்சிபால்,

இடையில் குறும்புகள் எழுந்தன. திரு.வி.கவுக்குத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பதவி கிடைத்தது குறித்துப் பொருமை கொண்ட சிலர், பிரின்சிபாலிடம்