பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

63

சென்று வத்தி வைத்தனர்; பொய்ப் பிரசாரம் செய் தனர்; கயிறு திரித்தனர்.

சுப்பராய காமத் என்பவர் மங்களுரைச் சேர்ந்தவர்; இளைஞர்; அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய கியூ இந்தியா’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் உதவி யாசிரியராகப் பணிபுரிந்தவர்.

ஒரு நாள், திரு.வி.க. தமது வீட்டுவாயிலில் உலவிக் கொண்டிருந்தார். அதுபோது, சுப்பராய காமத் திரு.வி.க.வைச் சந்தித்தார். தம்மை அறிமுகம் செய்து

கொண்டார்.

அவர்தம் கருங் குஞ்சியும் புருவமும், மீசையும், புன்முறுவலும், பவள வாயும், முத்துப் பல்லும் மலர் முகமும்’ திரு.வி.க.வின் கண்களுக்கு விருந்தாயின. சுப்பராய காமத்தும் திரு.வி.கவும் சகோதரராயினர்.

காமத்தின் முயற்சியால் இராயப்பேட்டை சகோதர சங்கம் காணப்பட்டது. அச்சங்கத்தின் போஷகர் அன்னி பெசன்ட் அம்மையார். தலைவர், ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர்; அமைச்சர், சுப்பராய காமத் திரு.வி.க. ஒரு கிர்வாகி. சகோதர சங்கத்தின் சார்பில் தோன்றிய பள்ளிகள் பல. அமைப்புகள் பல.

அந்நாளில் தியாசோபிகல் சங்கத்துக்கும் கிறிஸ்துவச் சபைகட்கும் இணக்கமில்லை. வெஸ்லி கல்லூரி மானுக்கர் சிலருக்குக் கசையடி வழங்கப் பட்டது குறித்துப் பெருங் கிளர்ச்சி செய்தது கியூ இந்தியா’ பத்திரிகை. அப்பத்திரிகையோ அன்னி

  • திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புக்கள்.