பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64

பெசண்ட் அம்மையாரின் தலைமையில் வெளி வருவது. அம்மையாரோ இராயப்பேட்டை சகோதர சங்க போஷகர். அச்சங்க கிருவாகி திரு.வி.க. எனவே கசை யடிக் கிளர்ச்சியில் திரு.வி.க.வுக்கும் பங்குண்டு என்று பொருமையாளர் வத்தி வைத்தனர்.

இராயப்பேட்டை சகோதர சங்கத்தின் சார்பில் பெண் பாடசாலை ஒன்று திறக்கப்பட்டது. அதன் பெயர் பவானி பாலிகா பாடசாலை என்பது, அ.து இராயப்பேட்டை ஆண்டித் தெருவில் இருந்தது. அதே தெருவில் வெஸ்லியன் மிஷன் பெண் பாடசாலை ஒன்றும் இருந்தது. வெஸ்லியன் மிஷனுக்குப் போட்டி யாகவே, பவானி பாலிகாபாடசாலைஏற்பட்டது என்றும் அப்போட்டியில் திரு.வி.க.வின் பங்குண்டு என்றும், பிரின்ஸிபாலிடம் கோள் மூட்டினர் பொருமையாளர், நிலைமை கெருப்பில் கெய்விட்டதுபோல் ஆயிற்று.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்க்குழுவின், தலைவர், தோட்டக்காடு இராமகிருஷ்ண பிள்ளை, கா. நமசிவாய முதலியார், சச்சிதானந்தம் பிள்ளை முதலி யோர் திரு.வி.க.வின் பொருட்டுப் பெருமுயற்சி செய்தனர். வெஸ்லி கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பதவி திரு.வி.க.வுக்கே கிடைத்தது.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதிருைம் ஆண்டு சூன் மாதம் இறுதி வாரத்தில் அப்பதவி ஏற்றர் திரு.வி.க. ஒன்றரை ஆண்டு தமிழ்த் தொண் டாற்றினர்.

வெஸ்லி கல்லூரிப் பண்டிதர்கள் குறைந்த சம்பளம் பெற்று வந்தார்கள். சம்பள உயர்வுக்குப் பாடு பட்டார் திரு.வி.க.