பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

85

கல்லூரி பிரின்சிபாலிடம் அது பற்றிப் பேசினர். அப்பேச்சின் விளைவு யாதாயிற்று? பண்டிதர் சம்பள உயர்வு பெற்றனர். பண்டிதர்க்குப் போதிய வசதிகள் இல்லாதிருந்தன. போதிய வசதிகள் பெற்றுத் தந்தார் திரு.வி.க. இவ்வாறு ஒன்றரை ஆண்டு ஓடியது.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதின்ைகாம் ஆண்டு. ஐரோப்பாவில் பெரும் போர் மூண்டது. கமது காட்டிலே அன்னி பெசண்ட் அம்மையார் ஹோம் ரூல் கிளர்ச்சி தொடங்கினர். சிறையினின்றும் வெளி வந்த திலகர் பெருமானும் அக்கிளர்ச்சியில் பங்கு கொண்டார்.

அரசியல் பித்துத் திரு. வி. க.வை ஆட் கொண்டது. சுய ராஜ்யக் கிளர்ச்சியில் பங்கு கொள்ள விரும்பினர் அவர். அதற்கேற்ற வாய்ப்பும் கிட்டியது.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினரும் ஆண்டு கிறிஸ்துமஸ் ஒய்வின் போது, சைவசித்தாந்த மகா சமாஜத்தின் சார்பிலே சைவர் மகாகாடு ஒன்று கடை பெற்றது. கடை பெற்ற இடம் இராஜூ கிராமணியார் தோட்டம். அத்தோட்டம், சென்னை அமில்டன் வாரா வதி அருகே இருந்தது.

மகாகாட்டுத் தலைவர் யாழ்ப்பாணம் சபாரத்தின முதலியார். மகாகாடு மூன்று நாள் நடைபெற்றது. மூன்றாவது காள் பிற்பகல் ஓர் அறிக்கை வழங்கப் பட்டது. அவ்வறிக்கை யாது கூறிற்று? மாலையில் பிட்டி தியாக ராஜ செட்டியார் பேசுவார் என்று கூறிற்று. பொருள் பிராமணரல்லாதார் முன்னேற்றம்’ என்று குறிப்பிடப் பட்டிருந்தது. மாலையில் தியாக

தி.-5