பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

67

பற்றிப் பேசி, வகுப்பு வாதத் தீ உமிழ்ந்தது. ஐஸ்டிஸ் கட்சியின் சார்பில் மூன்று பத்திரிகைகள் வெளி வந்தன. மூன்றும் தினப்பதிப்புகள். ஒன்று ஆங்கிலம்; மற்றாென்றுதமிழ், இன்னென்று தெலுங்கு.

ஆங்கில தினப் பதிப்பின் பெயர் ஜஸ்டிஸ்’ தெலுங்கு பத்திரிகையின் பெயர் ஆந்திர பிரகாசிகா’ தமிழ் தினப் பதிப்பின் பெயர் திராவிடன்.”

திராவிடன் வகுப்பு வாதத் தீ உமிழ்ந்தான்; சமயத்தைப் பழித்தான்; கோயிலைப் பழித்தான்! அதி கார வர்க்கத்தை ஆதரித்தான்; விடுதலை இயக்கத்தை எதிர்த்தான்.

இது பற்றிச் சென்னையின் பல் வேறு இடங் களிலும் சமயச் சார்புக் கூட்டங்கள் கூடின. இவை களில் திரு. வி.க. வும் கலந்து கொண்டார்; ஜஸ்டிஸ் கட்சியைத் தாக்கினர். ஜஸ்டிஸ் கட்சியை வீழ்த்தும் முயற்சி அவர்க்கு, ஒரு பெருங் தொண்டாகத் தோன்றியது. -

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினேழாம் ஆண்டு செப்டம்பர் மாதம்கோகலே மண்டபத்தில் ஒரு கூட்டம் கூடியது. அக்கூட்டம் திவான் பகதூர் கேசவப் பிள்ளை தலைமையில் கடை பெற்றது. திரு. வி. க. பேசினர். பொருள் தி ரா வி ட ரு ம் காங்கிரசும்’ என்பது.

முதன் முதல் திரு. வி. க. பேசிய அரசியல் கன்னிப் பேச்சு அதுவே. அப்பேச்சில் திராவிடர் வரலாற்றையும், ஆரியர் வரலாற்றையும் அவ்வரலாறு