பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

 ‘சுதந்திரச் சங்கு’ என்ற பெயர் இப்போது பலருக்குப் புதிதாகத் தோன்றும். ஆனல் மகாத்மா காந்தி தலைமையில் நடந்த உப்புப் போரின் போது சுதந்திரச் சங்கு பெருத்த தொண்டாற்றியது. விடுதலைப் போர் முரசாக முழங்கியது; போர்ச் சங்காக முழங்கியது. வாரம் மும்முறை. சிறிய அளவு. பக்கங்கள் சிலவே. விலை காலணு. அந்தக் காலத் திலே அறுபதாயிரம் பிரதிகள் செலவாயின.

அப்பத்திரிகையை வெளியிட்டவர் சங்கு கணேசன் எனும் பெயர் கொண்ட பரமதியாகி. அடக்குமுறைச் சட்டத்துக்கு அஞ்சாது பல முறை சிறை சென்ற சீரியர். அவர் தமது ஆசிரியர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டார்.

அப்பத்திரிகையின் செயலகம் திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் இருந்தது. மாலை நேரத்தில் தேசத் தியாகிகள் பலர் அங்கு வருவர். தமது அநுபவங் களைக் கூறுவர். கேட்போருக்கு விருந்தாகும்.

ஒருநாள் பெரியவர் ஒருவர் வந்தார். பத்திரிகைத் துறையில் பழகியவர். திரு. வி. க. வை நன்கு அறிந்தவர்.

“இளைஞர் ஒருவரைத் திரு. வி. க. தேடுகிறர். அவ் விளைஞர் ஆங்கிலம் அறிந்தவராயிருத்தல் வேண்டும். ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யும் திறமை பெற்றிருத்தல் வேண்டும். பிழையின்றித் தமிழ் எழுத அறிந்திருக்க வேண்டும். தேசிய உள்ளம் படைத்திருக்க வேண்டும். இத்தகை ஒருவரைத் தம் பத்திரிகைக்குத் தேடுகிறார்" என்றார் அவர்.

அப்பெரியவர் எனக்குப் புதியரல்லர். என்னை நன்கு அறிந்தவரே. பலமுறை நான் அவரைக் கண்டிருக் கிறேன். பேசியுமிருக்கிறேன்.

என்னைத் திரு. வி. க. விடம் அழைத்துச் செல்லுங்கள்’ என்று அவரிடம் விண்ணப்பம் செய்தேன்.

‘உன்னைப்பற்றி அவரிடம் சொல்லி விட்டேன். நாளையே நீ சென்று அவரைப் பார்’ என்றார் பெரியவர்.