பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

63

வாசப்பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் முதலியோர் உதவித் தலைவர்கள். தி. வி. கோபாலசாமி முதலியார், குருசாமி நாயுடு, டாக்டர் வரதராஜலு காயுடு, சர்க்கரைச் செட்டி யார் திரு. வி. க. முதலியோர் அமைச்சர். சென்னை மாகாண சங்கக் கொள்கை தென்னடு முழுவதும் பரவப் பிரசாரம் செய்தவர் டாக்டர் பி. வரதராஜலு காயுடு. -

இச்சங்கத்தின் தோற்றம் ஜஸ்டிஸ் கட்சிக்குப் பேரிடி ஆயிற்று. அக்கட்சி கொதித்தது; எரிந்தது. ஜஸ்டிஸ் கட்சிப் பத்திரிகைகள் சென்னை மாகாணச் சங்கத்தைக் கண்டபடி தூற்றின. சென்னை மாகாணச் சங்கம் பிராமணர் தம் ஏவுதலால் அவர்தம் அடிமை களால் தொடங்கப் பட்ட தென்று ஏசின. அதை மறுக்கப் பத்திரிகை ஏதுமில்லை. பத்திரிகை ஒன்று தேவை என்ற எண்ணம் எல்லாருடைய உள்ளத்திலும் உருக் கொண்டது.

‘நீங்கள் தமிழாசிரியர் பதவி விட்டுப் பத்திரி காசிரியர் பதவி ஏற்பதானுல் ஒரு பத்திரிகை தொடங்க வேண்டிய ஏற்பாடு செய்யலாம்’ என்றார் சுப்பராய காமத். கேயர் பலரும் திரு. வி. கவை வற்புறுத்தினர். வற்புறுத்தலுக்கு ஒருப்பட்டார் திரு. வி. க. வெஸ்லி கல்லூரியை விட்டுப் பத்திரிகாசிரியர் பதவி ஏற்பதாக உறுதி மொழியும் தந்தார்.

சுப்பராய காமத்தும் குமாரசாமி செட்டியாரும் சேர்ந்து ஒர் அச்சுக்கூடத்தை வாங்கினர். அதற்குப் ‘பிரிட்டிஷ் இந்தியா பிரஸ்’ என்று பெயர் சூட்டினர். அதைப் பதிவு செய்யும் உரிமை, திரு. வி. கவுக்கு கல்கப்பட்டது. ஆயிரம் ரூபா ஈடுகாணம் கட்டினர் திரு. வி. க. சென்னை பிரசிடென்சி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் பதிவு செய்து கொண்டார்.