பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

71

நேரே போந்தனர் சிலர்; கடிதம் எழுதினர் வேறு சிலர்; மீண்டும் கல்லூரிக்கே செல்லுமாறு வற்புறுத்தினர்.

அவர் தம் செயல் என் செய்தது? திரு.வி.கவைச் சோர்வில் ஆழ்த்தியது. ஊக்கம் குன்றியது; சோர்வு பெருகி நின்றது. கவலையுற்றார் திரு.வி.க. சகோதர சங்கத்தின் திண்ணையில் அமர்ந்தார். நீண்ட நேரம் யோசித்தார். யோசித்த வண்ணம் இருந்தார்.

அப்போது வந்தது கியூ இந்தியா’ பத்திரிகை; பத்திரிகையைப் புரட்டினர் திரு.வி.க. தேசபக்தன்’ வருகை பற்றிய விளம்பரம் கண்டார்.

தொடர்ந்து திரு. வி. கவைப்பற்றிய சிறப்புரை கொண்ட ஆசிரியக் குறிப்பு ஒன்றும் கண்டார். இரண்டும் அவர்தம் சோர்வைத் துாக்கி எறிந்தன. தேசபக்தன்’ அலுவலகம் சேர்ந்தார்.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினேழாம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏழாக்தேதி தேச பக்தன்’ ஆசிரியர் பதவி ஏற்றார்,

அவர்தம் உதவி ஆசிரியர் எல்லாரும் இளைஞர், ஊதியத்துக்கு என்று உழைக்க வந்தவர் அல்லர்; தேச பக்தி மேலீட்டான் சேவை செய்ய வந்தவரே.

வெ. சாமிகாத சர்மா, சேஷாத்திரி சர்மா, வேங்கடாச்சாரியார், பழனிவேல், சம்பத் ஆகியோரே தொடக்கத்தில் உதவி ஆசிரியர்களாக இருந்தனர். பின்னே குலாமே ஹமீத், பரலி, கெல்லையப்பர். இராஜகோபால், நடேசன் ஆகியவர் வந்து சேர்ந்தனர். சில காளில் தேச பக்தன்’ லிமிட்டெட் போர்வை,

பெற்றான். சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் டாக்டர் ராஜன், டாக்டர் வரதராஜலு, ஈ. வே. இராமசாமி