பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

73

ஆங்கிலத்தில் அழகாகப் பேசுவர்; தமிழ் தெரியாது

,

இவ்வழக்கத்தை எதிர்த்துப் பெருங்கிளர்ச்சி செய் தான் தேச பக்தன்’. அக்கிளர்ச்சியின் பயனுக விளைந்த நன்மையை இன்று நாம் காண்கிருேம். மகா காடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் பிற இடங்களிலும் தமிழ் இன்று கடம்புரிதல் காண்கிருேம்.

அங்காளில் மேடைகளில் பேசுதற்கென்று தேச பக்த'னைப் படித்த அரசியல் தலைவர் பலர். தமிழாய்ந்த ஐரோப்பியப் பாதிரிமார் பலர் தேச பக்தன் சக்தாதாரா யினர். தேச பக்தன்’, தமிழரை அக்கிய மோகத்தி னின்றும் விடுவித்தான் என்று சொல்வது மிகை யாகாது.

அக்காலத்தில் சட்டசபையில் ஆங்கிலமே பேசப் படும். தமிழர்க்குத் தமிழ் கினைப்பு வருதல் அரிது. அங்காளில் ஒரு முறை சேலம் பி. வி. நரசிம்ம ஐயர் சட்ட சபையில் தமிழில் பேசினர். அது பற்றி எவரும் பாராட்டினரல்லர். எப்பத்திரிகையும் பாராட்டவில்லை. நரசிம்ம ஐயரைப் பாராட்டி ஒரு குறிப்பு எழுதின்ை தேச பக்தன்.”

இந்த நரசிம்ம ஐயரே பிற்காலத்தில் துறவியானர்; சென்னை மயிலாப்பூரில் சாய் பாபா கோவிலை நிறுவினர். இஃது இங்குக் குறிப்பிடத் தக்கது.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு சென்னை மாகாணச் சங்கத்தின் சார்பில் தஞ்சை-திருச்சி மாகாடு நடைபெற்றது. இந்தியன் பேற்றியட் ஆசிரியர் திவான் பகதூர் கருணுகர மேனன் தலைமை வகித்தார். அம் மகாகாட்டில் பல தீர்மா