பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74

னங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் ஒன்று, தமிழைப்பற்றியது.

அத்தீர்மானத்தை வழி மொழிந்து பேசினர் திரு.வி.க. பொதுக் கூட்டங்களில் தமிழர்கள் தாய் மொழியிலேயே பேச வேண்டும் என்றார். எவரேனும் அயல் மொழியில் பேசப் புகுந்தால் பொது மக்கள் அவரைத் திருத்தல் வேண்டும் என்றார், அதுபற்றித் தேச பக்தன் வாயிலாகவும் கிளர்ச்சி செய்தார். திரு.வி.க.வின் பேச்சும் எழுத்தும் என் செய்தன? தக்க பயன் தந்தன.

தமிழில் பேசத்தெரியாது’ என்று கூறி, ஆங்கிலத் திலேயே பெருந்தலேகள் பேசிவந்த காலம் அது. திரு.வி.கவின் கிளர்ச்சியால் அங்கிலை மாறியது. “தமிழில் பேசத் தெரியாது’ என்று கூறி வந்தவர்கள்ஆங்கிலத்தில் நாவன்மை காட்டியவர்கள்-தமிழில் பேசத் தொடங்கினர்.

தமிழில் பேசினுல்தான் மக்கள் கேட்பர்’ எனும் நிலையை உண்டுபண்ணியவர் திரு.வி.க. இது பெரும் புரட்சியன்றாே திரு.வி.க நிகழ்த்திய முதல் புரட்சி இது.

அதிகார உலகின் மீதும் தேச பக்தன்’ கருத்துச் செலுத்தி வந்தான்; அதிகாரிகளின் நல்ல செயல்களைப் போற்றினுன்; மற்றச் செயல்களைக் கண்டித்தான். அதல்ை அதிகாரிகளின் தவறுதல்கள் தேச பக்தனில் வெளிவந்தன. அத்துறை யில் தேச பக்தன்” செய்த கிளர்ச்சி அதிகாரிகளுக்குப் பேரிடி ஆயிற்று. தேச பக்தனில் என்ன வந்திருக்கிறது? என்ன வந்திருக்கிறது?’ என்று தெரிந்துகொள்ள அதிகாரிகள் அ8லவார்கள்.