பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75

தேச பக்தியைப் பலவாறு வளர்த்து வந்தான் தேச பக்தன்”. அவற்றுள் ஒன்று, தலைவர்களிடத்துப் பக்தியை வளர்த்தமை. லோகமான்ய பால கங்காதர திலகர். அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோரின் புகழ்களை ஓதி வந்தான் தேச பக்தன்’’.

ஆசிரியர் திரு.வி.க.வின் மேசைமீது திலகர் பெரு மானின் திருமுக உருவம் பொலியும். அஃது அவர் கருத்தில் கின்று உருத்திர கலை எழுப்பும்; எழுதுகோலைப் பாசுபதமாக்கும்.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினேழாம் ஆண்டு சூன் மாதம் இருபத்தி நான்காம் தேதி அன்னி பெசன்ட் அம்மையார் காப்பில் வைக்கப்பட்டார். அதை யொட்டி ஸர். எஸ். மணி அய்யர் தமது ‘ஸர்’ பட்டம் துறந்தார். அதிகார வர்க்கம் அவரை ஒறுக்கப் போகிறது என்ற செய்தி எங்கும் பரவியது. அச்சமயம் மயிலை முனிந்திரர்’ என்ற தலைப்பிட்டு ஓர் ஆசிரியக் கட்டுரை எழுதினர் திரு.வி.க.

அக்கட்டுரையைப் படித்த ஐயர் தமிழ் மொழியின் சக்தியைக் கண்டேன்; கண்டேன்’ என்று கூறித் திரு. வி. கவுக்கு ஆசி கூறினர்.*

டாக்டர் வரதராஜலு நாயுடு மதுரையில் சிறைப் பட்ட போது, வீர முழக்கம் செய்தான் தேசபக்தன்’. ஹார்னிமன் காடு கடத்தப்பட்டபோது பக்திக்கனல் உமிழ்ந்தான் தேசபக்தன்’.

கிலாபத் கிளர்ச்சி, சத்தியாகிரக இயக்கம், பஞ்சாப் படுகொலை முதலியன நிகழ்ந்த வேளைகளில் தேச பக்தன்” கிலையம் காளி கட்டமாயிற்று. அங்கே காளி

  • திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்.