பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76

கடம்புரிந்த வண்ணமிருப்பாள். அந்நடனம் உமிழும் சுவாலை எரிமலை போன்றிருக்கும்.

அந்தக் காலத்தில் இவ்வாறு ஒரு தினசரிப் பத்திரிகை கடக்குமாயின் அதிகார வர்க்கம் வாளா இருக்குமோ? இராது அன்றே!

அதிகார வர்க்கத்தின் சில் விஷமம் போலிஸ் கமிஷ னரின் வாய்மொழி எச்சரிக்கையளவில் நின்றது. ஒரு முறையா? பல முறை. திரு. வி. கவை அழைத்து அழைத்து வாய்மொழி எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தார் கமிஷனர்.

ஒரு நாள், திரு. வி. க. வின் மாணுக்கருள் ஒருவர் வந்தார். “இன்று மாலை தங்களுக்குப் பறிமுதல் கட்டளை கிடைக்கும்’ என்று சொல்லிப் போனர். அவர் அரசாங்க ஊழியர். அதைக் காமத்துக்கு அறிவித்தார் திரு.வி.க.

‘அப்படியாயின் இரண்டாவது ஈடு காணம் கேட்கப் படும். இரண்டாவது முறை கேட்கப்படும் ஈடு காணம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பத்தாயிரம் ரூபாய் வரை இருக்கும். அதற்குரிய முயற்சியை இப்போதே தொடங்குதல் வேண்டும். நீங்கள் எங்கேனும் போய் இரண்டு நாள் தங்கி வாருங்கள். அதற்குள் நான் விண்ணையும் மண்ணையும் புரட்டி விடுவேன்’ என்றார் காமத். காமத்தின் வேண்டுதலுக்குத் திரு. வி. க.

இணங்கினரா? இல்லை. இணங்க மறுத்தார்.

“பழைய நிலையை மறந்துவிடுங்கள். இப்போது நீங்கள் அரசியல் உலகில் வாழ்கிறீர்கள். தந்திரம் வேண்டும். தயக்கம் வேண்டாம். உங்கள் தயக்கத்தால் தேசபக்தனுக்குக் கேடு விளையும்’ என்றார்.