பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78

முக்கால் மணி நேரத்துக்குள் இன்ஸ்பெக்டர் கோதண்டராம முதலியார் வந்தார்; திரு. வி. கவைக் கண்டார்; பறிமுதல் கட்டளையை வழங்கினர்; சென்றார் (28-2-1919)

சிறிது நேரத்தில் காமத் வந்தார்; பறிமுதல் கட்டளையைக் காட்டினர் திரு. வி. க.

போதிய முயற்சி செய்திருக்கிறேன்; பெசண்ட் அம்மையார் உதவி செய்வதாக உறுதியளித்திருக் .கிறார்’ என்றார்.

அடுத்த நாள். அதாவது ஆயிரத்துத் தொளா யிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு மார்ச்சுமாதம் முதல் தேதி.

பென்ட்லண்ட் பிரபு தேசபக்தன் மீது பாணம் செலுத்தி யிருக்கிறார் தேசபக்தன் இரத்தம் சொரிகிருன்! தேசபக்தர்களே பணத்தைச் சொரியுங்கள்!”

இவ்வாறு தேசபக்தன் முதற் பக்கத்தில் பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டார் திரு. வி. க. அன்று முதல் பென்ட்லண்ட் ஆட்சியின் அழுகல்களை எடுத்து எடுத்துத் தேசபக்த'னில் எழுதி வந்தார் திரு. வி. க.

எட்டு நாட்கள் சென்றன. ஒன்பதாம் காள் காலை யி ல் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் சேலத்தி லிருந்து பணம் திரட்டி வந்தார். கண்பர் சிலர் அளித்த தொகை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் ரூபாய் ஐயாயிரம் இருந்தது.

பத்தாம் நாள் காலை, திரு. வி. கவும் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் மாஜிஸ்டிரேட்டிடம் சென்