பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

79

றனர். ஐயாயிரம் ரூபாய் ஈடு காணம் செலுத்தினர். தேசபக்தன்’ என்றும் போலவே வந்தான்.

பாரதியார், வ. வே. சு. ஐயர் ஆகிய இருவரும் அப்போது புதுவையில் இருந்தனர். அவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் காலடி வைத்தல் கூடாது என்ற தடை இருந்தது. அத்தடையை நீக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தான் தேசபக்தன். பாரதியார் கூடலூரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப் பட்டது அறிந்தான் தேசபக்தன்”; சீறின்ை. பாரதியார் சிறையினின்றும் விடுவிக்கப்பட்டார்.

இவ்வாறு இருக்கும்போது, திரு.வி.க, அவர்களைக் கலவாமல் பிரிட்டிஷ் இந்தியா அச்சுக் கூடத்தை ஒத்தி வைத்துவிட்டார் காமத். அதாவது அந்த அச்சுக் கூடத்தை அடகு வைத்துப் பணம் வாங்கிவிட்டார். இஃதறிந்தார் திரு.வி.க. பிரிட்டிஷ் இந்தியா அச்சுக் கூடம் தேசபக்தன்’ லிமிட்டெட்டில் சேராதது. அதன் பதிவுப் பொறுப்பு திரு.வி.க. வினுடையது. எனவே, அது சம்பந்தமாக ஒரு காரியம் செய்தால் திரு. வி. க. வைக் கலந்தன்றாே செய்தல் வேண்டும்?

“கம் பெயர் மீது பதிவு பெற்றுள்ள அச்சகத்தை கமக்குத் தெரியாமலே ஒத்திவைப்பது அடாத செயல்’ என்று எண்ணினர் திரு. வி. க. தேசபக்தனே விட்டு விலகுவதே நல்லது என்று உறுதி கொண்டார். 22-7-1920-ல் தமது நிலையை விளக்கித் தேசபக்த’ னில் தலையங்கம் எழுதினர் திரு.வி.க. தேசபக்தன்’ பத்திரிகையினின்றும் விலகினர்.