பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

10. காங்கிரசும் திரு.வி.கவும்

திரு.வி.க.வின் உள்ளத்தில் காங்கிரஸ் விதை விழுந்துவிட்டது. அது முளைவிட்டுத் தளிர்விட்டுச் செடியாகி மரமானது 1917ம் ஆண்டில் 6T6bf .

அக்காளில் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம் என்று தென்னுட்டுக் காங்கிரஸ் பிரியவில்லை. அது, சென்னை மாகாணக் காங்கிரஸ் என்றே வழங்கப்பட்டு வந்தது. பின்னரே (25-8-1921) சென்னை மாகாண காங்கிரஸ் மொழி வழியாகப் பிரிக்கப்பட்டது; ஆந்திரம், தமிழ் காடு, கேரளம் என்று பிரிக்கப்பட்டது.

தொடக்கத்தில் காங்கிரஸ் சார்பில் கூடும் கூட்டங் களில் ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கையை மறுப்பதே, திரு.வி.க.வின் தொண்டாக விளங்கியது.

அன்னிபெசண்ட் அம்மையார் காவலில் வைக்கப் பட்டதைக் கண்டித்து நடைபெற்ற கூட்டங்கள் பல வற்றில் திரு.வி.க. கலந்து கொண்டு பேசினர்.

1917 ஆகஸ்டில் பெசண்ட் அம்மையார் காவலி னின்றும் வெளிவந்தார்; 1917 இறுதியில் கூடிய அகில இந்திய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.