பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89

பக்கிங்ஹாம் மில் தொழிலாளர் போராட்டத்தில் அவர் சிக்கியதே.

1922ம் ஆண்டு காங்கிரஸ் கயாவில் கூடியது. தேசபந்து சித்தரஞ்சனதாசர் தலைமை வகித்தார். மகாத்மா சிறையிலிருந்தார். wror. ற்கொண் டிருந்த ஒத்துழையாமைத் திட்டத்தில் மாறுதல் வேண்டும் என்பது சித்தரஞ்சன்தாசரின் விருப்பம். மகாத்மா சிறையிலிருக்கும் போது காங்கிரஸ் திட்டத் தில் எவ்வித மாறுதலும் ஏற்படுத்தல் கூடாது என்பது இராஜகோபாலாச்சாரியார் உள் ளி ட் ட பலரின் விருப்பம்.

மாறுதல் வேண்டுவோர், மாறுதல் வேண்டாதார் என்று காங்கிரசார் இரு கூறயினர். மாறுதல் வேண்டு வோரின் கட்சியாக சுயராஜ்யக் கட்சியைத் தோற்று வித்தார் தேசபந்து சித்தரஞ்சன்தாசர். சட்டசபையை விலக்குதல் கூடாது என்பதும், சட்டசபையைக் கைப்பற்றி முட்டுக் கட்டை போட்டு இரட்டையாட் சியை ஒடுக்குதல் வேண்டும் என்பதும் சுயராஜ்யக் கட்சியின் கொள்கை

திரு. வி. க. மாறுதல் வேண்டாதாரை ஆதரித் தார். காங்கிரசில் பிளவு கூடாது என்பது திரு. வி. க. வின் கருத்து.

சுயராஜ்யக் கட்சி காங்கிரசுக்குள்ளே இருக்க இ. ம் தரலாகாது, என்றும்,அவ்வாறு இடம்தந்தால் இன்னும் பல கட்சிகள் தோன்றும் வாய்ப்புண்டாகும் என்றும் திரு. வி. க பிரச்சாரம் செய்தார். சுயராஜ்யக் கட்சி காங்கிரசின் ஆதரவு பெற்றுத் தனியே இயங்குதல் கல்லது என்றார்,