பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

31

யாமையை மீண்டும் உயிர்ப்பித்தல் கூடும் என்பது திரு. வி. க வின் உட்கிடக்கை.

இங்கிலையில் 1924 நவம்பர் 15, 16 தேதிகளில் திருவண்ணுமலையில் தமிழ் காட்டுக் காங்கிரஸ் கூடியது.

அம் மகாகாட்டுக்குத் தலைமை வகித்தவர் ஈ. வே. ரா. அம் மகாகாட்டுத் தீர்மானங்களில் முடியா யிலங்கிய தீர்மானம் சட்டசபை நுழைவு பற்றியது. அத்தீர்மானத்தை எதிர்த்து வீழ்த்தும் பொருட்டுச் சிறை சென்ற செல்வங்கள் கூடின. தீர்மானத்தைக் கொண்டுவரும் பொறுப்பு திரு. வி.க மீது வீழ்ந்தத. அச்சுமையை ஏற்றுக் கொண்டார் திரு. வி. க. தீர்மானத்தை மகாகாட்டின் முன் கொண்டு வந்தார்.

காலநிலை, காட்டு கிலை, அரசியலில் பிடிவாதம் கூடாது என்பது, சட்டசபையைப் பற்றிக் காட்டினுல் காட்டின் வாக்காளரில் பெரும்பான்மையோர் காங்கிரஸ் சார்பினராயிருத்தல் அரசாங்கத்துக்குப் புலகுைம் என்பது முதலிய வற்றை விளக்கி, இப் போதைய நிலையில் ஆக்கவேலையுடன் சட்ட சபையைப் பற்றி முட்டுக்கட்டையிட்ட பின்னரே பழைய ஒத்துழையாமை எழுதற்கு இடமுண்டாகும். ஆதலின் ஒத்துழையாமை உள்ள முடையோர் அதில் உறுதி யுடையோர் அதை விரைவில் உயிர்ப்பிக்கவேண்டு மென்ற வேட்கையுடையோர் இத்தீர்மானத்தை ஆதரிக்க முன் வருதல் வேண்டும். இல்லையேல் காங்கிரசின் ஆக்கம் நாளுக்கு நாள் குறைந்து போகும்.

  • திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்.