பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92

காங்கிரஸ் பெரியது; காடு பெரியது; சுயராஜ்யம் பெரிது; பிடிவாதம் பெரியதன்று’ என்று கூறித் தீர் மானத்துக்கு ஆதரவு நல்குமாறு பிரதிநிதிகளை வணங் கிக் கேட்டுக் கொண்டார் திரு.வி.க.

இதற்குத் திருத்தப் பிரரேபனை ஒன்று கொண்டு வந்தார் ஹாலாஸ்யம் அய்யர். சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார் இதனை ஆதரித்தார். ஆனல் இந்தத் திருத்தம் தோல்வியுற்றது. திரு. வி. க. கொண்டு வந்த அசல் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் கிறைவேற்றப்பட்டது.

திேருவண்ணுமலை மகாகாடு பற்றி அகஸ்தியர் (ரா. கிருஷ்ணமூர்த்தி-கல்கி) கவசக்தி'யில் பின் வருமாறு குறிப்பிட்டார்:

“1920-ம் ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த மகா நாட்டிலிருந்து சென்ற மாதம் வரையில் தமிழ்நாட்டில் நடந்துள்ள காங்கிரஸ் கூட்டங்களில் இராஜகோபாலாச் சாரியாரால் ஆதரிக்கப்பட்ட எந்த முக்கிய தீர்மானமும் தோற்றுப் போனதில்லை.

திருவண்ணுமலையில் தான் முதன் முதலாக அவருக்குப் பெருந்தோல்வி ஏற்பட்டது. ஒத்துழையாமைத் தொடக் கத்திலிருந்து திரு. வி. கலியாணசுந்தர முதலியாரும் ஆச்சாரியாரும் எதிர்க் கட்சிகளிலிருந்து போராடியதும் இம் மகாநாட்டில்தான்.”

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து ஐந்தாம் ஆண்டு நவம்பரில் கூடியது தமிழ் காட்டுக் காங்கிரஸ். இடம் காஞ்சி, இம்மகா காட்டிற்குத் திரு. வி. க. தலைமை வகித்தார்.

  • திரு. வி. க. வாழ்க்கை குறிப்புக்கள்.