பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94

ஒப்படைக்கப் பட்டது. காரணம் செங்கற்பட்டு ஜில்லா வில் பெரிய மலை ஒன்று கின்றது; ஜஸ்டிஸ் மலை.

அம்மலை வீழ்ந்து விட்டால் ஜஸ்டிஸ் கட்சியே வீழ்ந்து விடும் என்று கருதினர் காங்கிரசார். அம்மலை எது? சர். ஏ. ராமசாமி முதலியார்.

ஏறக்குறைய ஆறுமாத காலம் காடு முழுவதும் பிரச்சாரம் செய்தார் திரு.வி.க.

இங்கிலையில் ஒரு வதந்தி பிறந்தது. அவ்வதந்தி காங்கிரஸ் கூட்டத்திலும் உலாவியது. என்ன வதந்தி:

சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்குப் போதிய அளவு வெற்றி கிடைத்தால் அது சட்ட சபையில் முட்டுக்கட்டை போடாது. மந்திரி சபை அமைக்க முயலும்’ என்பதே.

ஒரு நாள். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பனகல் ராஜா பீட்டர்ஸ் ரோடில் திரு. வி. கவைச் சக்தித்தார்.

கிங்கள் முட்டுக்கட்டை போடப் போவதாகப் பிரச்சாரம் செய்கிறீர்கள். மக்கள் ஏமாந்து வாக்களிக்கப் போகிறார்கள். முட்டுக்கட்டை கடக்கப் போவதில்லை. காங்கிரஸ், மக்திரி சபை அமைத்தே தீரும்” என்று கூறினர்.

கேட்டார் திரு.வி. க., கேராக எஸ். ரீகிவாச ஐயங் கார் வீடு சென்றார், ஐயங்காரைப் பார்த்தார். பனகல் ராஜா சொன்னதை அப்படியே ஐயங்காரிடம் வெளி யிட்டார்.

“இதில் ஏதேனும் உண்மை உண்டா?’ என்று

கேட்டார்.