பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

96

காரியக் கூட்டத்தினின்றும் விலகுக’ என்று மனச் சான்று ஒலித்தது. காரியக் கூட்டத்தினின்றும் விலக உறுதி கொண்டார்.

அவ்வாறே 9-7-1926ல் விலகல் கடிதமும் அனுப்பிவிட்டார். அதைத் திரும்பப் பெறுமாறு ஸ்ரீநிவாச ஐயங்காரும்; அரங்கசாமி ஐயங்காரும் திரு. வி. க. வை வற்புறுத்தினர்.

அவர் தம் வற்புறுத்தலுக்குத் திரு. வி. க. இணங் கினர் அல்லர். தம் மனச்சான்று வழியே உறுதியாக கின்றார்,

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து ஒன்பதாம் ஆண்டு இறுதியில் லாகூரில் கூடிய காங்கிரஸ், ஒத்துழையாமையை உளங் கொண்டது. ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதாம் ஆண்டில் ‘உப்புச் சத்தியாக்கிரகம்’ பீறிட்டு எழுந்தது.

திடீரென்று ஒரு காள் சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரியார் திரு. வி. க. வின் இல்லம் போக் தார். அவருடன் கே. பாஷ்யமும் இருந்தார். ஆச் சாரியார் சத்தியாக்கிரக அறிக்கைபை நீட்டினர்.

  • யான் உடல் மெலிந்தவன்; ஒதுங்கி நிற்பவன்; போருக்குத் தகுதி இல்லாதவன்; என் கையெழுத்து எற்றுக்கு?’ என்று கூறினர் திரு. வி. க.

“உங்களைப் போருக்கு அழைக்க காங்கள் வர வில்லை; கையெழுத்திடுங்கள்!” என்றார்,

Tதிரு. வி. வாழ்க்கைக் குறிப்புகள்ே