பக்கம்:திரு. வி. க.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 91

கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்- எப்பாரும் எப்பதமும் எங்கனுநான் சென்றே எந்தைதின் தருட் புகழை இயம்பியிடல் வேண்டும்-செப்பாத மேனிலை மேற் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்-தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ! நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே என்று வேண்டுதல் செய்து எழுங்கள்; சிவசோதி உங்களுக்கு வழி காட்டும்; நால்வர் துணை உங்களுக்குக் கிடைக்கும்; அஞ்சாது எழுங்கள்; எழுங்கள்.” திருக்கோயில்கள் ஆன்மாக்கள் லயிக்கும் இடமாய் அமைக்கப்பெற்றன. ஆனால், நாளடைவில் அத் திருக் கோயில்கள் சொத்துச் சேர்த்து அதனைப் பரிபாலிக்கும் நிலையங்களாய் மாறியது விந்தையே. திருக்கோயில் சம்பந்தமான வழக்குகள் நாள்தோறும் எத்தனை வருகின்றன என்பதை அறிய யாரும் மனம் நோவாமல் இருத்தல் இயலாது. இதுபற்றிக் கூறவந்த பெரியார்.

“இத்தகைய அன்பு சிவத்துக்கு-சாந்த சிவத் துக்குப் பொன்னாம்! பூணாம்! பொருளாம்! நிலமாம்! புலமாம்! சட்டமாம்! திட்டமாம்! வழக்காம்! வக்கீலாம்! அந்தோ! என்ன கொடுமை! கொடுமை! அன்புக்கும் சாந்தத்துக்கும் எடுக்கப்பட்ட கோயில்கள் ‘பூர்ஷ்வாக்கள் உலவும் அமைப்புகளாயின.

‘என் வீடு சகல சாதியாருக்கும் செப வீடு எனப் படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகைகளாக்கினர்களே என்று சொன்னார் என்று மார்க்கிலுள்ள (11:17) நன்மொழியை நோக்குக’

1. சித்த மார்க்கம், பக்கம் 36-37. 2. ஆலமும் அமுதமும், பக்கம் 23.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/101&oldid=695386" இலிருந்து மீள்விக்கப்பட்டது