பக்கம்:திரு. வி. க.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இ. அச. ஞானசம்பந்தன்

என மனம் நொந்து பேசுகிறார்.

திருக்கோயில்கள் இறைவன் உறையும் இடமாக இருந்த வரை, ஆன்மா லயிப்பதற்கும் வழிபாடு செய்வதற்கும் ஏற்ற இடமாய் அமைந்தன. இத்தகைய திருக்கோயில்களிலும், இயற்கைச் சூழல்களிலும் அன்பர்கள் வழிபாடு செய்தனர். வழிபாட்டிற்குக் கிரியைகள் வைத்தது மிகப் பிற்பட்ட காலத்திலேயேயாகும். உள்ளத் துறவைத் தவிர வேறு எதனையும் வழிபாட்டிற்கு வேண்டிற்றிலர் நம்மவர்.

அக வழிபாடும் துறவும்

புற வழிபாடு இறைவனைத் தனியாகவும் தன்னைத் தனியாகவும் நிறுத்திக் கொண்டு செய்வதாகும். அகவழிபாடு கடவுளைத் தன்னுட்கொண்டு தியானஞ் செய்வதாகும். இறைவனை வழிபட்டு அவனருள் வழி நின்று அவனை உணர்த்துவதற்கு மனைவி, மக்கள், வீடு முதலியவற்றைத் துறந்து செல்லவேண்டிய தேவை இல்லை. காட்டிற் சென்று கன சடை வைத்து, மூச்சைப் பிடித்துத் தான் இறையை உணரவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. மனைவி, மக்கள், வீடு, வாசல் ஆகிய அனைத்துமே இறைவனுடைய உடைமை. தானும் அவனுடைய உடைமை என்ற எண்ணம் ஆழ்ந்து பதிந்துவிட்டால் போதுமானது. அனைத்தும் இறைவன் உடைமை என்பதே அறிந்து விட்ட பிறகு யார் யாரை அல்லது எதைத் துறப்பது?

உருவ வழிபாடு - -

புறவழிபாட்டில் இறைவனுக்கு ஒரு திருவுருவைச் சமைத்துக்கொண்டு வழிபாடு செய்கின்றனர் பெரியோர். அத் திருவுருவில் அன்பர்கள் வைத்திருக்கும் அன்புக்கு ஓர் எல்லையே இல்லை எனலாம். அத் திருவுருவை நினையுந் தோறும் அவர்கள் நெஞ்சம் பாகாய் உருகியது. அன்பின் பெருக்கால் அத் திருவுருவிற்கு அபிஷேகஞ் செய்து, மலரிட்டுப் பணிகின்றனர். இன்னுங் கூற வேண்டுமாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/102&oldid=695387" இலிருந்து மீள்விக்கப்பட்டது