பக்கம்:திரு. வி. க.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 93

அத் திருவுருவை தம் தாயாய், தந்தையாய், ஏன்? தோழ னாகவும் கருதி வழிபட்டனர்; அன்பு செய்தனர். முழு வல்லமையும், எங்கும் நிறை தன்மையுங் கொண்ட அப் பரம்பொருளைக் குழந்தையாக்கித் தொட்டிலிலிட்டு விளையாடவும் அடியார்கள் தயங்கியதில்லை. இவை அனைத்தும் அன்பின் முதிர்ச்சியில் ஏற்படும் செயல்களா கலின் யாரும் அதனைத் தவறாகக் கருதுவதில்லை. இவ்வாறு செய்தமையின் இறைவனுடைய பெருமையை அவர்கள் அறியவில்லை என்று யாரும் குறை கூறினதுமில்லை. புறவழிபாட்டின் பிரிவு

இத் திருவுருவ வழிபாடு நாளாவட்டத்தில் இன்னும் விரிவடைந்து மண், நீர், தீ, வளி ஆகிய பூதங்கள் முதல் அனைத்திலும் இறைவனைக் காணும் பெருவாய்ப்பாக மாறிற்று. ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஆகிய பெரு மக்கள் அனைவரும் ஊர் ஊராகச் சென்று சகுன வழிபாடு செய்து பாடல்கள் இயற்றினாலும் குறுகிய இந்த நிலையைக் கடந்த வர்கள் அவர்கள் என்பதை மறத்தலாகாது. - பல கற்றும் பயனில்லை

இப் பெருமக்களுடைய வரலாறுகளை இவர்கள் மாட்டு அன்பு கொண்ட பிறரும் படித்தனர். திரு.வி.க.வும் படித்தார். இவர்கள் வாழ்விலிருந்து ஏனையோர் கற்றுக் கொண்ட பாடம் வேறு. திரு.வி.க. கற்றுக்கொண்ட பாடம் வேறு. நால்வர் வரலாற்றையும் அறுபத்துமூவர் வரலாறு களையும் அறிந்துகொண்டு அன்றாடம் பாராயணம் செய்யும் மெய்யன்பர்கள் கூடச் சாதிப் பேய்க்கு அடிமை யாகி உழன்றனர். .

“சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்”

நாவுக்கரசர் தேவாரம், 5ஆம் திருமுறை, 604

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/103&oldid=695388" இலிருந்து மீள்விக்கப்பட்டது