பக்கம்:திரு. வி. க.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 103

நிகழ்த்துகின்றனர்; சிலர் திருடுகின்றனர்; சிலர் கொள்ளையிடுகின்றனர்; சிலர் கொலை செய்கின் றனர். எனவே, உலகில் நற்செயல்களும், தீச்செயல் களும் நடந்து வருகின்றன. ஆதலால், மனிதர் செய்யும் பணிகளுள் எதைக் கொள்ளுவது, எதைத் தள்ளுவது என்னும் ஐயம் உலகில் அடிக்கடி நிகழ்கிறது.

மனிதர் செய்யும் பணியை இரண்டு கூறாகப் பிரிக்கலாம். ஒன்று பயன் கருதும் பணி, அதாவது, காமியப் பணி; மற்றொன்று பயன் கருதாப் பணி, அதாவது நிஷ்காமியப் பணி, பின்னதைச் செய்வோர் கடவுட்டன்மை பெற்றவராவர். அவர் செழுமையுற்று ஓங்கி வளர்ந்து கடவுள்நிலை எய்துவர். அவரைக் கடவுளாகவும் வழிபடலாம். முன்னதை - அதாவது காமியப் பணியை - செய்வோர் பல துன்பங்கட்கு ஆளாகி வருந்துவர். அவர் தம் நிலைகுலைந்து, கீழ்ப்பட்டுள்ள விலங்கு புள் முதலிய அஃறிணைப் பொருள் நிலையை அடையினும் அடைவர். பகுத்தறி வைப் பண்படுத்த இயலாத அஃறினை உடலங்களைத் தாங்கிய பின்னர், அரிய மனித உடல் தாங்கப் பெறுவோர். தம் பகுத்தறிவை நற்றுறையில் நிறுத்தி வினையாற்றாது, அதைக் காமியப் பணியாம் தீத்துறையிலாட விடுவது எத்தகைய அறியாமை? மனிதப் பிறவி தாங்கிய பகுத்தறிவு பெற்றுள்ள செல்வரே! எச்சரிக்கை எச்சரிக்கை!! இன்னும் உலகில் திட்காமியப் பணி நிகழ்த்துவோர் தொகை மிகக் குறுகியே நிற்கிறது; காமிய பணி செய்வோர் தொகை பெருகியே நிற்கிறது! என்ன அறியாமை!

நம் முன்னோர் உலகப் போக்கை உணர்ந்தே உலகத்தை நிட்காமியப் பணிவழி நிறுத்தப் பல முறைகளைக் கோலிச் சென்றனர். அவற்றுள் சிறந்தது தெய்வ வழிபாடு. நிட்காமியப் பணி மக்களிடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/113&oldid=695399" இலிருந்து மீள்விக்கப்பட்டது