பக்கம்:திரு. வி. க.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இ. அ.ச. ஞானசம்பந்தன்

கனிவதற்கு நம்மவர் தெய்வ வழிபாட்டையே கொண்டனர். காரணம் யாது?

t அருள் வடிவாக உள்ள கடவுட் பணிகளெல்

லாம் கைம்மாறு கருதாதன. அவ்வியல்புடைய ஒன்றை ஒருவர் இடையறாது எண்ணுவாராயின் அதன் இயல்பு அவரிடத்திலும் படியும். அவர் கடவுளைப் போலக் கைம்மாறு கருதாப் பணிசெய்து நின் மலராவர்.

இன்னோரன்ன காரணம் பல பற்றியே நம் முன்னோர் இறைபணியை முதலாவதாக வைத்தனர். விடுதலை விரும்பும் அனைவரும் நிட்காமியப் பணி செய்தே தீரல்வேண்டும். காமியப் பணி செய்வோருக்கு அடிக்கடி மனக்கலக்கமும் பிற துன்பங்களும் நேர்ந்து கொண்டே போகும். ஆதலால் உலகில் பிறந்த மக்கள் அனைவரும் நிட்காமியப் பணி ஆற்றக் கடமைப்

பட்டிருக்கின்றனர்.

நிட்காமியப் பணி வளர்ச்சிக்கென ஏற்பட்ட தெய்வ வழிபாடுகள், பிற்றை ஞான்று காமியப் பணிக்கும், பிற பணிகளுக்கும் நிலைக்களமாகி விட்டன. நம் முன்னோர், நிட்காமியப் பணியை வளர்க்கும் தெய்வ வழிபாட்டை மூர்த்தி வழியாகவும் தலவழியாகவும், தீர்த்த வழியாகவும் நிகழ்த்தி வந்தனர். இந்தியாவில் தேவாலயங்கள் நிரம்பியிருப்பதன் காரணத்தை அறிஞர் ஒர்தல் வேண்டும். எல்லாம் கடவுள் வடிவம் என்னும் ஞானம் பிறந்த இந்தியாவில், உருவ வழிபாட்டிற்குரிய கோயில்கள் மல்கியிருப்பது ஆராயத்தக்கது. உபநிடதங்களை ஒதிய முனிவரர்-அவற்றுக்குப் பாடியங்கள் வரைந்த அறிஞர்-ஆலயப் பணி செய்திருக்கின்றனர். இந்திய ரல்லாத மற்ற நாட்டவரும் ஆண்டவன் கோயிலென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/114&oldid=695400" இலிருந்து மீள்விக்கப்பட்டது