பக்கம்:திரு. வி. க.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 105

ஒரு தனியிடம் வகுத்தே கடவுளை வழிபட்டு வருகின்றனர்.

கடவுள் நீக்கமற யாண்டும் நிறைந்து நிற்பவர். அவரை வழிபடுவதற்கு ஒரிடம் வகுக்கப்படுவதன் நோக்கம் யாது? அந் நோக்கம் மக்கள் மனத்திடை நிட்காமிய கருமத்தை - பணியை-பதியச் செய்ய வேண்டுமென்பதேயாகும்.

உலகில் பெரும்பான்மையோர் இலெளகிகத் தொழில்களைச் செய்வோரேயாவர். அன்னார் என்றும் எங்கும் நிறைந்துள்ள கடவுளை மனமொழி மெய்களால் போற்றப் போதிய ஒய்வு பெறமாட்டார். அவர் பொருட்டு ஆலய வழிபாடு ஏற்பட்டி ருக்கலாம்.”

முடிவுரை

இதுகாறுங் கண்டவற்றுள்ளிருந்து சமயவாதியாகிய திரு.வி.க. வைப்பற்றி ஒருவாறு அறிந்து கொள்ளலாம். சமயவாதி என்பவர்கள் காவியுடுத்திக் கனசடை வைத்துக் காடுபுக்குத் துறவை மேற்கொண்டவர்களாகவோ, அன்றி மணிக்கணக்கில் ஆயிரக்கணக்கில் பூக்களை அருச்சனை செய்து மணியடித்து வழிபடுவர்களாகவோ இருக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. சமயம் வாழ்க்கை யோடு ஒன்றியதாய், குருதியுடன் கலந்ததாய் இருத்தல் வேண்டும். திரு.வி.க. இளம்பிராயம் முதல் இறுதிவரை சமய வாழ்வு வாழ்ந்த ஒரு தவப் பெரியார், இளமையில் அவரே ஒப்புக் கொள்கின்றபடி சமயவெறி கொண்டவராகவே வாழ்ந்தார். நாளாவட்டத்தில் அந்த வெறி மேன்மைத் தன்மையடைந்து சமயப் பண்பாக மாறிவிட்டது. ஏனையோர் சமயத்தை மேற்கொண்டனர். குறிகளாலும்

என் கடன் பணிசெய்து கிடப்பதே, பக்கம் 36-37.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/115&oldid=695401" இலிருந்து மீள்விக்கப்பட்டது