பக்கம்:திரு. வி. க.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 109

தமிழறிஞராம் தேசபக்தர்

தேசப்பற்றுக் கொண்டு தொண்டு செய்தவர்கள் இந்த நூற்றாண்டில் பலருண்டு. ஆனால், அம்மாபெரும் வீரர் திருக்கூட்டத்தில் தமிழறிஞர்களாகவும் இருந்தவர்கள் விரல் விட்டு எண்ணத் தகுந்தவரேயாவார். வ.வே.சு. ஐயர், கவிச்சக்கரவர்த்தி பாரதியார், வ.உ. சிதம்பரனார், திரு.வி.க. என்பவர்கள் இச்சிலருள் முக்கியமானவர்கள். இவருள்ளும் வவேசு. ஐயரவர்கள் திருக்குறள், கம்பராமாயணம் என்ற இரு நூல்களிலுமே முழுக் கவனத்தையும் செலுத்திவிட்டார். வ.உ.சிதம்பரனார் தொல்காப்பியம் முதலிய நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் அதிகக் கவனம் செலுத்திவிட்டார். கவிச்சக்கரவர்த்தி பாரதியாரும் திரு.விகவுமே பல்வேறு துறைகளில் தமிழ்த்தொண்டு புரிந்தனர். கவிஞர், தம்முடைய ஒப்பற்ற கவிதைகளின்மூலம் உறங்கிக் கிடந்த தமிழகத்தைத் தட்டி எழுப்பினார். நாட்டுப் பாடல்கள் எழுதுவதுடன் அவர் நின்றுவிடவில்லை. திருவிகவைப் போலவே சமயத்தை அனைத்துடனும் கலந்து கவிதை இயற்றினார். திருவி.க. சமரசம் என்ற பெயரை மிகுதியும் ஆண்டு எழுதினார். ஆனால், பாரதியாரும் இவரைப் போலவே சமய வெறிக்குட்படாது முழுமுதலைக் கருத்தில் இருத்திச் சமரச நோக்குடன் தம் கவிதைகளை யாத்தார். பாரதநாட்டையே சக்தி தேவியாக உருவகஞ் செய்து தம் கவிதைகளில் பாடினார். . .

பாரதியாரும் திரு. வி.க.வும்

பாரதியார் முதலாவதாகக் கவிதை, இரண்டாவதாக உரைநடை என்பனவற்றின்மூலம் செய்த தொண்டைத் திரு.வி.க முதலாவதாக உரைநடை, இரண்டாவதாகக் கவிதை என்பவற்றின் மூலம் செய்தார். தமிழ் மனப்பான்மையுடன் அரசியலைக் கண்ட பெருமை திரு.வி.க. வையே சாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/119&oldid=695405" இலிருந்து மீள்விக்கப்பட்டது