பக்கம்:திரு. வி. க.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அச. ஞானசம்பந்தன்

சமரசம், சமய வாழ்வு, பழந்தமிழர் பண்பாடு இற்றின் அடிப்படையில் நின்று அரசியலைக் கண்டார் நம் பெரியார்.

வரலாற்றறிவின் இன்றியமையாமை

அரசியலில் ஈடுபடும் ஒவ்வொருவரும் வரலாற்றறிவு பெற்றிருக்க வேண்டியது இன்றியமையாதது. தாம் வாழும் பகுதியின் வரலாற்றைச் சிறப்பாகவும், தம்முடைய நாட்டின் வரலாற்றைப் பொதுவாகவும் அறிந்திருக்க வேண்டியது ஒவ்வோர் அரசியல்வாதியின் முதற் கடமையாகும். சரித்திரம் மீட்டும் மீட்டும் திரும்புகிறது என்பது பழைய பழமொழி. எனவே, தம்முடைய நாட்டில் முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் அறிவது போதாது. அந்நிகழ்ச்சிகளை இத்துணைக் காலம் கழிந்து நின்று பார்ப்பவர்கள் அதனால் விளைந்த பயனையும் அதுதரும் படிப்பினையையும் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது.

வேண்டுவார் வேண்டுவதை ஈவதே வரலாறு

ஒரு நாட்டின் வரலாறு என்பது விரிந்தும் பரந்தும் கிடக்கின்ற ஒன்றாகும். எனவே அதனைப் படிக்கின்ற ஒருவர் எந்தக் கண்ணோட்டத்துடன் படிக்கின்றாரோ அதற்கேற்ற படிப்பினையையே அந்த வரலாறு நல்கும். போர்புரிந்து நாட்டைப் பெருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வரலாற்றைப் படிக்கின்றவர்கள் அதற்கேற்ற சூழ்நிலையை மட்டும் அறிந்து அமைதி பெறுவர். முன்னர்ப் போரிட்ட வர்கள் வெற்றி பெற்றிருப்பின் அதற்குரிய காரணங்கள், தோற்றிருப்பின் அதற்குரிய காரணங்கள் ஆகியவற்றை ஆய்வர். போர் வேண்டாவென்று அதனை வெறுக்கின்ற வர்களும் வரலாற்றைக் கற்கின்றனர். முன்னர் நிகழ்ந்த போர்கள் எக்காரணத்தால் நிகழ்ந்தன. எந்தச் சூழ்நிலையில் நிகழ்ந்தன என்பவற்றை ஆய்ந்து அத்தகைய காரணங்களும் சூழ்நிலைகளும் உருவாகாதவாறு தடை செய்ய முயல்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/120&oldid=695407" இலிருந்து மீள்விக்கப்பட்டது