பக்கம்:திரு. வி. க.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 113

இம்முறையில் தொடங்கும் நூல் எத்தகைய நோக்குடன் செல்கின்றது என்பதை எளிதில் அறிய முடியும், இதனையடுத்து அவர் காலத்தில் விரிவாக நடைபெற்ற ஆரிய திராவிடச் சண்டைபற்றிப் பேசுகிறார்.

“ஆரியர் ஒரே இடத்தில் வாழ்ந்தவரென்பதும், பின்னே அவர் பல்வேறு நாடுகளுக்குப் போந்தன ரென்பதும் பல சரித்திர ஆசிரியர் உள்ளக்கிடக்கை. ஆரியர் ஒரே இடத்தில் வாழ்ந்தபோது அவர் பெரிதும் ஆடுமாடுகளை வளர்த்து அவற்றைக் கொன்று தின்று வந்தனர். இந்திய நாடு நோக்கிய ஆரிய மக்கள் ஆடுமாடுகளைக் கொன்று தின்பதை நிறுத்தி விட்டார்கள். மற்ற நாடுகள் நோக்கியவர் இன்னும் பழைய வழக்கத்திலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். இந்தியாவின் இயற்கை தன்னை அடைந்தவரையும் தன் வண்ணமாக்குவதென்க.

ஆரியர் இந்தியாவுள் துழைந்தபோது புலால் தின்பவராகவேயிருந்தனர்; விலங்குகளை வேள்வித் தீயிலிட்டுச் சுட்டு அவியுண்டு வந்தனர். அந் நாளில் விருஷபதேவர் என்ற அறவோர் தோன்றி மக்களுக்கு அஹிம்ஸா தர்மத்தை அறிவுறுத்தினர். மக்கள் படிப்படியே கொலையையும், கொலை வேள்வியையும் விடுத்தார்கள். கொலை கொல்லாமையாக மாறிற்று; கொலை வேள்வி, கொல்லா வேள்வியாய்-ஆத்மஞான வேள்வியாய்-தியாக வேள்வியாய் மாறிற்று. இம் மாறுதல்களை வேதத்திற் காணலாம். :

வேதத்தில் சில பகுதிகள் கொலையை யும்-கொலைவேள்வியையுங் கூறுகின்றன. சில பகுதிகள் கொல்லாமையையும்-ஞானவேள்வியையும் கூறுகின்றன. கொலையையும்-கொலைவேள்வியையுங் கூறும் பகுதிகள் வேதத்தின் முன்னேயிருப்பன; கொல்லாமையையும்-ஞான வேள்வியையுங் கூறும் பககிகள் வேதத்தின் பின்னேயிருப்பன. இரண்டையுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/123&oldid=695410" இலிருந்து மீள்விக்கப்பட்டது