பக்கம்:திரு. வி. க.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இ. அ.ச. ஞானசம்பந்தன்

பற்றி அவர் காலத்தில் நிலவிய பல்வேறு கருத்துகளையும் ஆரியர் நாலாயிரம் ஆண்டுகளின் முன்னர் இந்தியாவிற் குடிபுகுந்தனர் என்னுங் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறார். எனினும், நாளாவட்டத்தில் ஆரியர் திராவிடராகிய இவ்விரு இனத்தவரும் ஒன்று கலந்து விட்டனராகலின் பிரித்தறிதல் இயலாது என்னுங் கருத்தை வலியுறுத்துகிறார். நாடுகளுள் பிரிவு எவ்வாறு உண்டாயிற்று என்ற வினாவை அடுத்து எழுப்பித் தமக்கேயுரிய முறையில் விடை இறுக்கின்றார். மனிதன்பால் இயல்பாக அமைந்துள்ள ஆசையும் வெறியுமே ஒருவர் நாட்டில் மற்றவர் புகுந்து சூறையாடவும் சுரண்டவும் இடந்தந்துள்ளன என்பதே அவர் கண்ட விடையாகும்.

குடியேற்றம்

ஒரு நாட்டில் பிற நாட்டவர் சென்று குடிபுகுதல் என்றுமே நடைபெற்றுவரும் ஒரு வழக்காகும். அது தவறுடையதென்று பெரியார் கருதவில்லை. இற்றை நாளில் கூடக் கடல்கடந்து சென்று பிற நாடுகளில் தங்கியுள்ள தமிழர்கள் இன்று அவதியுறுவதன் காரணம் விரிவாகப் பேசப்பெறுகிறது. இவர்கள் எங்குச் சென்றாலும் அந் நாட்டவரோடு ஒட்டி உறவாடி அந்நாட்டினருடன் கலந்து விடுவதில்லை. இக்காலத்தார் சிலர் தமிழர் மாட்டுக் காணப்பெறும் பெருமைக்குரிய செய்தியாக இதனைக் கருதவும் பேசவும் செய்கின்றனர். உண்மை வேறுவிதமாக உள்ளது. தமிழரையல்லாத பிற பகுதி இந்தியர்கள், சீனர்கள் முதலாயினோர் எந்த நாட்டில் குடியேறினாலும் நாளா வட்டத்தில் அந்நாட்டைத் தம் தாய்நாடாகவே ஏற்றுக் கொள்கின்றனர். ஒட்டாத் தமிழர்

தமிழர் மட்டும் எத்தனை நூறாண்டுகளாயினும் தாம் சென்று வாணிகம் செய்யும் நாட்டுடன் ஒட்டுவதே இல்லை. ஒட்டவேண்டும் என்று கூறினவுடன் தம் தனித் தன்மையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/128&oldid=695415" இலிருந்து மீள்விக்கப்பட்டது