பக்கம்:திரு. வி. க.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இச் 3

பெற்று விளங்குவது அவருடைய தமிழ் உரைநடை தான். அந்த உரைநடை சிறப்புற மூலகாரணமாய் அமைந்தவர் திரு. விக. கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர், சிறந்த எழுத்தாளர் கல்கியாக மலர்வதற்குத் தொடக்கத்தில் வழி வகுத்த பெருமை திரு. வி.க.வையே சாரும்.

பொன்னாக்குபவர்

திரு. வி.க. என்ற மூன்றெழுத்துக்குள் ஓர் உலகமே அடங்கியுள்ளது. பஞ்சாக்கரத்தினுள் ஆன்மிக உலகம் அடங்கி இருப்பதுபோல் திரு. வி.க. என்ற மூன்றெழுத்துள் தமிழ் இலக்கணம், இலக்கியம், சமயம், சமரசம், அரசியல் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன என்று கூறினால் மிகையாகாது. தொட்டவற்றை எல்லாம் பொன்னாக்கும் எழுத்தாளர் என்று கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கிலக் கலைஞர் ஒருவர்க்குப் பெயர் உண்டு. தமிழ் மொழியில் ஒருவர்க்கு அத்தகைய பெயர் தரவேண்டுமாயின் அவர் திரு. விகவே என்று அஞ்சாமற் கூறிவிடலாம்.

தமிழ்வாணர்களுள் கவிஞர் உண்டு, உரை நடையாளர் உண்டு. சமயவாதிகள் உண்டு. சீர்திருத்தவாதிகள் உண்டு. சமரசவாதிகள் உண்டு. அரசியல்வாதிகள் உண்டு. மார்க்ஸியவாதிகள் உண்டு. தொழிலாளர் இயக்க வாதிகள் உண்டு. இவரெல்லாம் தனித் தனியே உளர். ஒரோவழி மேலே கூறிய சிறப்புகளுள் ஒன்றுக்கு மேற்பட்டு இரண்டு சிறப்புகள் பெற்றவர்களும் உண்டு. ஆனால், இவை அனைத்தையும் ஒன்றாகத் தம்முள் சுருட்டி அடக்கிய தமிழர் ஒருவர் உண்டு என்றால்- ஏன், இந்தியாவிலேயே ஒருவர் உண்டு என்றால்- அவர் திரு. வி.க. ஒருவரேயாம். அவருக்கு முன்னும் இத்துணைச் சிறப்புடையார் ஒருவர் வாழ்ந்ததில்லை. இன்றும் அத்தகையார் ஒருவரைக் காணவில்லை. நாளை வருவாரோ ஏதோ அறியோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/13&oldid=695417" இலிருந்து மீள்விக்கப்பட்டது