பக்கம்:திரு. வி. க.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 123

ஆழ்வார்கள் என்பவர்களுடைய வாழ்க்கையிலிருந்து திரு.வி.க. கற்ற பாடம் இதுதான். கைவந்த விதம்

தன்னலத்தைச் சுட்டெரித்துச் சமரச சன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்தவர்களே இந்த அடியார்களும், நாயன்மார் களும், ஆழ்வார்களும். இவர்கட்கு இப் பெரிய நிலை எவ்வாறு கைவந்தது? இறைவனிடம் கொண்ட எல்லையற்ற அன்பினால்தான் இந்நிலை கைவந்தது. எனவே, நம் பெரியார் அதே முறையை நாமும் கையாள வேண்டும் என்று கூறுகிறார். சமய வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையை யும் பிரிக்க வேண்டாவென்று மகாத்மா கூறிச் சென்றார். திரு.வி.க.வுக்கும் அக்கருத்து (( உடன்பாடுதான். நாயன்மார் திறம் என்ற நூலில் நாயன்மார்களில் யாரும் எதையும் துறந்து விட்டு ஓடவில்லை. இந்த உலகில் இருந்துகொண்டே அத்தகைய வாழ்க்கை வாழ முடிந்தது அவர்களால் என்று கூறுகிறார். இந்த அடியார்களுள் அரசர் உண்டு, வணிகர் உண்டு, அமைச்சர் உண்டு, படைத்தலைவர் உண்டு, சாதாரண மக்களும் உண்டு. பல்வேறு துறைகளிற் பணிபுரிந்த இவர்கள் எவ்வாறு இந்நிலையை அதாவது ஆசையை அறவே அகற்றிய நிலையை அடைய முடிந்தது? புறத்தே எத்தகைய வாழ்க்கையை மேற்கொண்டாலும் அகத்தே அன்பு வாழ்க்கையை மேற்கொண்டிருந்ததனா லேயே சன்மார்க்க வாழ்க்கையை அடைய முடிந்தது. -

அன்றைய நிலை

பண்டைய நாளில் மக்கள் ஓரளவு சமதர்ம வாழ்க்கையைப் பெற்றிருக்கக் காரணம் அவர்கள் ஆசையும். அதிகமில்லை. ஆசைப்படக்கூடிய பொருள்களும் அதிக மில்லை. ஆடம்பர வாழ்க்கை என்பது மிகவும் குறைவாக இருந்த காலம். அதைவிட மேலாக நீர்வழிப்படுஉம் என்பதை உணர்ந்திருந்தனராகலின் பிறரைக் கண்டு அழுக்காறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/133&oldid=695421" இலிருந்து மீள்விக்கப்பட்டது