பக்கம்:திரு. வி. க.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. ஜ் 125

சக்கரவர்த்திகளின் பெயர்களைப் புராணங்களிற் காணலாம்.

பழம்பாரதம் ஐம்பத்தாறு நாடுகளாகப் பிரிந்திருந்த காலமுண்டு. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மன்னரால் ஆளப்பட்டு வந்தது. அம் மன்னர்க் கெல்லாம் மன்னர் மன்னர் என்று (சக்கரவர்த்தி என்று) ஒருவர் வீற்றிருந்தனர். பழைய காலச் சக்கரவர்த்திகளின் பெயர்களைப் புராணங்களிற் பார்க்கலாம். சரித்திர காலத்திலும் சிலர் சக்கரவர்த்தி களாக நின்று முற்கால இந்தியாவை ஆண்டனர் என்று தெரிகிறது. அவருள் சிறப்பாகக் குறிக்கத் தக்கவர். அசோக சக்கரவர்த்தி (272-232 கிமு).

அசோகர் ஆட்சியில் சேர, சோழ, பாண்டி நாடுகள் அகப்படவில்லை என்று சிலர் கூறுப. அது தவறு. சேர சோழ, பாண்டியர், அசோகர் அறத்தை எதிர்க்கவில்லை. அவ்வறம் தம் நாடுகளில் வளர அவர் இடந்தந்தனர். அசோகர் விரும்பியவாறு அறவுரைகள் பொறிக்கப் பெற்ற துரண்களைத் தம் நாடுகளில் ஆங்காங்கே நாட்ட மூவேந்தரும் ஒருப்பட்டதைச் சரித்திரஞ் சொல்கிறது. இதனால் அசோகர் அறஆட்சி இந்தியா முழுவதும் நிலவியதென்றே கொள்ளுதல் வேண்டும். :

“முற்கால இந்தியாவின் ஆட்சியில் ஒருமைப் பாடு பொலிந்திருக்கலாம். மக்களுள் ஒருமைப்பாடி ருந்ததா? அவர்களுக்கென்று மொழி இருந்ததா? ஒரேவித தர்மம் இருந்ததா? ஒரேவித நாகரிகம் இருந்ததா? என்னும் வினாக்கள் இந்நாளில் பொறிக்கப்படுகின்றன. முற்கால இந்தியா நீண்ட காலந்தொட்டு அசோகர் ஆட்சிவரை நிலவியது என்று மேலே குறிக்கப்பட்டது. இப்பெருங்கால எல்லையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/135&oldid=695423" இலிருந்து மீள்விக்கப்பட்டது