பக்கம்:திரு. வி. க.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அ.ச. ஞானசம்பந்தன்

வடக்கும் தெற்கும்

கிறிஸ்துநாதர் பிறப்பதற்குப் பன்னூறு ஆண்டுகளின் முன்னரே தோன்றிய இப் பாடலில் இந்தியாவின் வட கோடியிலுள்ள மலைமுகட்டையும் தென் கோடியிலுள்ள மலைமுகட்டையும் சேர்த்துக் கவிதை புனைகின்றான் கவிஞன். தெற்கே அதிகம் பரவியிருந்த சைவ சமயத்தின் முழுமுதற் பொருளாகக் கருதப்பெறும் சிவபெருமான் விரும்பிச் சூடும் கங்கையும் மகிழ்ந்து உறையும் மலையும் வடக்கே உள்ளன. ஆனால், அவனுக்கே உரிய சிறப்புப் பெற்ற கொன்றைப்பூ தென்னாட்டுப் பூக்களுள் ஒன்று.

இதன் எதிராக வடநாட்டில் அதிகம் பரவியுள்ள வைணவ சமயக் கடவுளாகிய திருமால் விரும்பி உறைகின்ற இடம் தென்னாட்டுத் திருப்பதிகள் என்றும் நம் முன்னோர் கூறினர். கங்கையிற் புனித மாய காவிரி நடுவுபாட்டு என்று ஆழ்வார் பாடிச் செல்கிறார். எனவே இமயத்தையும் குமரியையும் ஒன்றாக இணைத்து ஒரு நாடாகக் கருதும் பழக்கம் இந் நாட்டில் மிகப் பண்டுதொட்டு வந்த ஒரு பழக்கமாகும். இவற்றையெல்லாம் இன்று நினைத்துப் பார்க்கின்றோம். உணர்ச்சி ஒருமைப்பாடு என்றெல்லாம் இன்று பேசுவது இயற்கை. அதுதான் நாகரிகமும் கற்றவர்க்கு அழகுமாகும் என்றும் கருதுகிறோம். ஆனால், திரு.வி.க. இவற்றை அரை நூற்றாண்டிற்கும் முன்னரே கண்டு எழுதியுமுள்ளார். எனில், அவரைப் போற்றி வணங்குவது தவிர நாம் செய்யத்தகுந்தது ஒன்றுமில்லை. நாம் கற்ற அசோகன் வரலாறு

இந்திய வரலாறு கற்கும் ஒவ்வொருவரும் அசோகரைப் பற்றிக் கற்காமலில்லை. அவருடைய கலிங்கப் போர், பின்னர் அவர் போரை வெறுத்து ஒதுக்கியது, அறக்கட்டளைகளைத்

தூண்களிற் பொறித்தது ஆகிய இவையே இன்றைய வரலாற்று நூல்கள் அசோகரைப்பற்றிக் கூறும் தகவல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/138&oldid=695426" இலிருந்து மீள்விக்கப்பட்டது