பக்கம்:திரு. வி. க.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 131

சமயம் பெரியோர் ஒருவர் தோன்றிக் காலத்துக்கேற்ற முறையில் அறத்தை நிலைபெறுத்துவர்.

புத்தர் காலத்துக்கு முன்னரே அறம் அரசியலி னின்றும் ஒதுங்கியிருக்கும். அறமற்ற அரசு உயிரற்ற உடல் போன்றது. புத்தர் பெருமான் தோன்றி அறத்தை நிலைபெறுத்திச் சென்றனர். அறம் மீண்டும் அரசியலில் நுழைந்து மதுநெறியை விளங்கச் செய்தது. இந்நுட்பம் அசோகர்க்கு விளங்கியிருக்கும். அதனால் அவர் அரசாட்சியில் பெளத்த தர்மத்தைப் புகுத்த முயன்று செந்நெறியை ஒம்பியிருப்பர். ஆகவே, அசோகர் மதுவை பெளத்தக் கண்ணாடியில் கண்டு, உண்மை விளங்கப் பெற்றிருப்பரென்று எனக்குத் தோன்றுகிறது. ஆதி மதுவும் புத்தருஞ் சேர்ந்த ஒருவர் அசோகரென்று கொள்வது நலம். அசோகர் எந்நெறியில் நின்றனரோ எவ்வறத்தைக் கடைப்பிடித்தொழு கினரோ அதைப்பற்றிய கவலை மக்களுக்கு வேண்டுவ தில்லை. அவர் ஆட்சியில் மக்கள் அறவொழுக்கத்தில் நின்று, நல்வாழ்க்கை நடாத்தி, இன்பம் துய்த்தது உண்மை. ஆதலின், அசோகர் ஆட்சி இன்றும் போற்றப்படுகிறது.

அசோகரைப் போன்ற மன்னர் மீண்டும் எந்நாளில் தோன்றுவரோ தெரியவில்லை. இக் காலத்துக்கு ஓர் அசோகர் தேவை. இந் நாளில் காரல்மார்க்ஸைத் தந்த தெய்வம் இன்னும் ஏன் அசோகரை அளியாமலிருக்கிறது? அசோகர் வரலாற்றை இளைஞர் பன்முறை படித்துப் படித்துப் பண்பட்டு நாட்டுக்குச் சேவை செய்ய முற்படுவாராக” -

‘இந்தியாவும் விடுதலையும், பக்கம் 55, 57.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/141&oldid=695430" இலிருந்து மீள்விக்கப்பட்டது