பக்கம்:திரு. வி. க.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அச. ஞானசம்பந்தன்

ஒருமைப்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாக நிற்கிறது. சமய மூலதர்மத்தில் ஒருமைப்பாடிருந்தமையால் வழிபாட்டிலும் ஒருமைப்பாடிருந்தது. -

கயிலைமுதல் கன்னியாகுமரிவரை திருப்பதிகள் உள்ளன. அத்திருப்பதிகளிற் போந்து இறைவனை வழிபடுவதில் பண்டை மக்கள் தலைசிறந்து விளங்கினார்கள். திருப்பதிகள் சென்று திரும்புவதால் உடலுக்கும் நலன் உண்டாகும்; உயிருக்கும் நலன் உண்டாகும். பழைய கால rேத்திர யாத்திரையால் விளைந்த நலன்கள் பல. அந்நலன்கள் இப்பொழுது விளைவதில்லை. கூேடித்திர யாத்திரையின் நோக்கமும் நுட்பமும் இந்நாளில் மறைந்தே போயின. இந்நாளைய நினைவு இங்கே வேண்டுவதில்லை. அதற்குரிய இடம் நூலின் பிற்பகுதியே.

கயிலையைத் தொழுவோர் பத்திரியை வணங்குவர்; பத்திரியை வணங்குவோர் காசியைப் பணிவர்; காசியைப் பணிவோர் துவாரகையைப் போற்றுவர்; துவாரகையைப் போற்றுவோர் ஜகந் நாதத்தை ஏத்துவர் ஜகந்நாதத்தை ஏத்துவோர் காஞ்சியை இறைஞ்சுவர்; காஞ்சியை இறைஞ்சுவோர் இராமேசுரத்தை வழுத்துவர்; இராமேசுரத்தை வழுத்துவோர் கன்னியை வழிபடுவர். இவ்வழிபாடு களினூடே ஒருமைப்பாட்டை நோக்குக. பழைய இந்தியா பலவழியிலும் ஒருமைப்பட்டே வாழ்ந்தது:

இரு பெரு விளக்கங்கள்

முற்கால இந்திய வரலாற்றைச் சமரச சன்மார்க்கத் தமிழறிஞர் என்ற முறையில் ஆய்ந்த திரு.வி.க., இடைக்கால இந்திய வரலாற்றில் அக்பரைக் கலங்கரை விளக்கமாகக்

- இந்தியாவும் விடுதலையும், பக்கம் 73-76.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/146&oldid=695435" இலிருந்து மீள்விக்கப்பட்டது