பக்கம்:திரு. வி. க.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 137

காண்கிறார். பெளத்த சமயத்தைப் பரப்புவதில் கண்ணுங் கருத்துமாக இருந்த அசோகர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிகோலிய அக்பர் என்ற இருவரும் முறையே முற்கால, இடைக்கால இந்தியாவின் கலங்கரை விளக்கங்களாகக் காட்சி நல்குகின்றனர்.

அக்பருடைய ஆட்சியின் சிறப்புகள் பல இருப்பினும், அவருடைய சமய சமரசம், மக்கட்காகவே ஆட்சி செய்த மாண்பு ஆகியவையே திரு.வி.க.வைக் கவர்ந்தன. அதனை அப்படியே தர விழைகின்றேன்.

“அசோகர் பெளத்தரைமட்டும் நேசித்து மற்றவ ரைத் துன்புறுத்தினாரில்லை. அவர் பெளத்தரையும் குடிமக்களாகவே கருதினர்; மற்றவரையுங் குடிமக்களா கவே கருதினர்; இருவருக்கும் ஒரே நீதி வழங்கினர். அக்பரும் முஸ்லிம்களையும் மற்றவரையும் குடிமக்க ளாகவே கருதி எல்லோருக்கும் ஒரே நியாயம் வழங்கினர். இருவர் அரசும் உலகிற்கு எடுத்துக் காட்டுக்களாக நிற்கும் மாண்பு வாய்ந்தன.

அக்பர் ஆட்சிமுறை திறமை வாய்ந்ததாகவே இருந்தது. அதன்கண் அன்பும் நீதியும் விரவியே நின்றன. நல்லமைச்சும் வீரப் படைத்தலைமையும் அக்பர் ஆட்சிக்குத் துரண்களாக நின்றன. அவர்தம் ஆட்சியில் அரசுக்குரிய அங்கங்களெல்லாம் ஒழுங்கு பட அமைந்திருந்தன. அவ்வமைப்புகளின் வகைகளை ஈண்டு விரித்துக் கூறவேண்டுவதில்லை. அக்பர் ஆட்சியில் கோலப்பெற்ற சீர்திருத்த முறைகளே பெரிதும் கருதற்பாலன. - -

அக்பர் முஸ்லிம். அவர் ஆண்ட நாடோ ஹிந்துக்களாலும் முஸ்லிம்களாலும் ஆக்கப்பட்டது. ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பலதிற வேற்றுமை களுண்டு. அவ்விருவர்க்குள் ஒற்றுமைகாண்டல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/147&oldid=695436" இலிருந்து மீள்விக்கப்பட்டது