பக்கம்:திரு. வி. க.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 5

நீதிமன்றம் வரை செல்லத் துணிந்த காலம். இலக்கணப் புலவர்கள், இலக்கியப் புலவர்களை எள்ளி நகையாடவும், இவர்களிருவரும் சமயவாதிகளைக் கண்டு நகையாடும் காலம் ஆகும் அது. ஆனால், இவர்கள் அனைவரிடையேயும் உள்ள பொதுத்தன்மை யாதெனில் இவர்கள் அனைவரும் பழமை என்னும் குட்டையில் ஊறிய மட்டைகள். தம்முள் எத்துணை முரண்பாடிருப்பினும் புதுமையை மறுப்பதில் ஒன்றாகச் சேர்ந்து தொல்காப்பியனார் கூறியபடி, கற்சிறை போல் ஒருவன் தாங்கிய சிறப்பை உடையவர்கள். தடி கொண்டு சென்று மக்களுக்குச் சைவ சித்தாந்த, விசிட்டாத்து வைத உண்மைகளைப் போதித்த காலம் அது. பெருமாள் கோயில் யானைக்குத் தென்கலை நாமம் இடுவதா? வடகலை நாமம் இடுவதா? என்பது பற்றிய வாதத்தை, இரண்டையுமே அறியாத ஆங்கில நீதிவான்களிடம் முறையிட்டு, அவர் கூறும் முடிவுக்கு ஏங்கி நின்ற காலம் அது. அடிமை மனப்பான்மையில் ஊறிப்போயிருந்த தமிழர்களின் இந்தச் சமயச் சண்டைதான் திரு. வி.க.வின் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

திருவருளின் தலையீடு

இத்துணைக் காலம் கடந்து அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கும்பொழுது இறைவனின் திருவுள்ளம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கதிரைவேற் பிள்ளைக்குச் சான்று கூறச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்க வில்லையானால் திரு. வி.க.வின் பள்ளிப் படிப்புத் தொடர்ந்து, கல்லூரிப் படிப்பாக மலர்ந்து ஒரு சிறந்த ஆங்கில அறிஞரைத் தமிழ்நாடு பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், தமிழ்நாட்டில் ஆங்கில அறிஞர்க்குப் பஞ்சமே இல்லை. திரு. வி.க.வின் காலத்து வாழ்ந்த ஆங்கில அறிஞர்கள் இன்று பொய்யாய்க் கணவாய்ப் பழங்கதையாய் மெல்லப் போய்விட்டனர். தம் கல்வி தடைப் பட்டதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/15&oldid=695439" இலிருந்து மீள்விக்கப்பட்டது