பக்கம்:திரு. வி. க.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 141

மகிழ்ச்சிக்கே. அதற்கென்று அதிகாரமும் சேனா பலமும் பயன்படல் வேண்டும். தமது எண்ணங்களை நிறைவேற்றுவதற்கென்று அதிகாரத்தையும் சேனா பலத்தையும் பயன்படுத்தும் அரசுகள் வீழ்ந்துபடுதல் ஒருதலை.

ஒளரங்கசீப்பின் அதிகாரமும் சேனாபலமும் பெரியனவாகவே இருந்தன. அவை தீய வழியில் பயன்படுத்தப்பட்டன. பெரிய அதிகாரமும் பெரிய சேனாபலமும் என்னவாயின?

பாபர் நாளிலிருந்து செவ்வனே வளர்ந்து வளர்ந்து, அக்பர் காலத்தில் ஓங்கியுயர்ந்த மொகலாய முஸ்லிம் ராஜ்யம், ஒர் ஒளரங்கசீப்பின் மதவெறியால் வீழலாயிற்று. கோனாட்சியில் மன்னர் நல்லவராக வாய்க்கப் பெற்றால் குடிமக்கட்கு நல்லன விளையும்; மன்னர் தீயவரானால்...? அவர் அழிவதுடன் இராஜ்யமும் அழிவதாகும்.

ஒளரங்கசீப் மதவெறியால் மங்காது அக்பரைப் போலப் பொது நோக்குடன் ஆட்சிபுரிந்திருந்தால் இந்தியாவில் சுதேச ஆட்சி நிலைத்திருக்கும்; பரதேச ஆட்சி நுழைதற்கே இடம் நேர்ந்திராது. ஒளரங்கசீப்பின் மதவெறி அவரை வீழ்த்தியது; இராஜ்யத்தை வீழ்த்தியது; நாட்டையும் அடிமைக் குழியில் வீழ்த்தியது. ஆகவே, அரசு எப்பொழுதும் சாதி மத நிறமொழி முதலிய வெறிகளைக் கடந்த ஜனநாயக முறையைக் கொண்டதாயிருத்தல் வேண்டும்.

ஒளரங்கசீப்புக்குப் பின்னே டெல்லியில் சக்கரவர்த்திகள் என்ற பெயரால் பொம்மைகளைப் போலச் சிலர் சிம்மாசனத்தில் கொலுவீற்றிருந்தனர். அவரனைவரும் இடிந்து வீழ்ந்த அக்பர் கோட்டையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/151&oldid=695441" இலிருந்து மீள்விக்கப்பட்டது