பக்கம்:திரு. வி. க.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 143

பிற்காலத்தில் முகிழ்ந்த ஆங்கிலர் ஆட்சியுடன் ஒப்பிடும் போது சிறந்ததென்றே கூறலாம். முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவைத் தாய்நாடாகவே கொண்டமையால் இந் நாட்டு வளம் இங்கேயே தங்கிற்று; பயன்பட்டும் வந்தது. முஸ்லிம் அரசில் இந்தியா வறுமையாலும் பஞ்சத்தாலும் அவதியுறவில்லை. கலைகள் வளர்ந்தன; உலகம் வியக்கும் கட்டங்களும் எழுந்தன. பன்னெடு நாள் சோதர நேயம் பெருகியே நின்றது.

“வெம்மையுற்ற இடைக்கால இந்தியா இந்து-முஸ்லிம் வேற்றுமையை-பிணக்கை-பகைமையைக் கண்டு கண்டு கண்ணிர் உகுத்துக் கொம்டே மறைந்தது. அதனின்றும் தற்கால இந்தியா பிறந்தது” என்ற வாக்கியத்துடன் இடைக்கால இந்தியா பற்றிய வரலாற்றை முடிக்கிறார் ஆசிரியர்.

தற்கால இந்தியா

தற்கால இந்தியா என்ற பகுதியில் பிரிட்டிஷார் இந்நாட்டில் புகுந்த நாள் தொடங்கி அவரால் செய்யப் பெற்ற கொடுமைகள் இடம் பெறுகின்றன. டிக்பி முதலிய ஆங்கிலேயர் எழுதியவற்றைக் கொண்டே ஆசிரியர் அந்த ஆட்சியின் கொடுமையையும் அந் நாளில் ஏற்பட்ட பஞ்சங்கள் பற்றியும் வரைந்துள்ளார். இறுதியாக உள்ள ஒரு பத்தி நம் நெஞ்சை உருக்குவதாகும். எவ்வளவு ஆறாத் துயரத்துடன் தமிழ் முனிவர் இதனை எழுதியிருப்பார் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன். அப்

பத்தி வருமாறு:

“இமயத்தடியில் ஒரு மாபெரும் பாரதக் கழகம் கூடியிருந்தது. அக் கழகத்தின் கிளைகள் ஒவ்வொரு கிராமத்திலும் நிலவியிருந்தன. அப் பெருங் கழகத்தில் உமை, திரு, வாணி, காளி, துர்க்கை. சூர் முதலியோர் வீற்றிருந்தனர். இக் கால இந்தியாவில் அப்பெருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/153&oldid=695443" இலிருந்து மீள்விக்கப்பட்டது