பக்கம்:திரு. வி. க.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 145

வன்முறை மறுப்பு

இந்த நம்பிக்கையினால்தான் வன்முறையை அவர் ஆதரிக்கவில்லை. பகத்சிங் போன்ற மாபெருந் தியாகிகள் தூக்குக் கயிற்றை முத்தமிடுவது கண்டு அரற்றியுள்ளார்: கண்ணிர் வடித்துள்ளார்; தமிழரையுங் கண்ணிர் வடிக்குமாறு செய்துள்ளார்; தம் பேனாவைக் கண்ணிரில் தோய்த்துத்தான் பகத்சிங்பற்றியும் யதீந்திரதாஸர் பற்றியும் எழுதினார் என்பது உண்மைதான். ஆனால், அதே நேரத்தில் பகத்சிங் போன்றவர்கள் கைக்கொண்ட வழியை அவர் ஆதரிக்கவே இல்லை. தொழிலாளர் இயக்கம் தோற்றுவித்துப் பல வேலை நிறுத்தங்களை முன்னின்று நடத்திய ஒரு வீரர் வன் முறையைக் கண்டித்தது வியப்பாய் இருக்கலாம். ஆனால், திரு.வி.க.வுடன் பழகியவர்கள். அவருடைய நூல்களைக் கற்றவர்கள் இதில் வியப்பெய்த ஒன்றும் இல்லை.

அஞ்சா நெஞ்சர்

மில்லில் வேலைநிறுத்தம் நடத்துவதும் ஒருவகைப் போராட்டந்தான்; நாட்டு விடுதலையைக் கோரி

வெள்ளையர்களைச் சுட்டு தள்ளுவதும் ஒருவகைப் போராட்டந்தான். ஒன்றை நலம் என்று ஏற்றுக்கொண்டு மற்றதை மறுக்க வேண்டிய இன்றியமையாமை என்ன என்று சிந்திக்க வேண்டும். மில்லில் பணிபுரிவோர் தம் நியாயமான கோரிக்கைகளை முதலாளிகளிடம் தெரிவித்துத் தீர்வுகாண முற்படுகின்றனர்; பேசிப் பார்க்கின்றனர்; முன் அறிவிப்புச் செய்கின்றனர். இவை ஒன்றிலும் வழி பிறக்காதபொழுது வேலை நிறுத்தஞ் செய்கின்றனர். வேலை நிறுத்தத்தால் ஏதேனும் கேடு வரும் என்றஞ்சிய மில் அதிபர்கள் கதவடைப்புச் செய்கின்றனர். ஆனால், வேலைநிறுத்தம் செய்கிறவர்களிடம் வன்முறை யாதும் இல்லை என்பதை

  • தமிழ்ச் சோலை-1, பக்கம் 389.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/155&oldid=695445" இலிருந்து மீள்விக்கப்பட்டது